அன்பு
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பின் வழியில் அமைவது வாழ்வதாம்
பண்பின் நிலையதும் சிறப்பு--கொண்ட.
அன்பே அருளும் அழகும் அணியும்
அருமருந்து மதுவே பிணிக்கு.
அன்பில் இணையும் அகிலம் ஒருங்கியும்
இன்பம் விளைக்கும் பேறு--என்றும்
கலகம் மறந்து கடமை உணர்ந்து
கழகம் அமையும் அன்பு.
அன்பில் விளைந்திடும் ஆருயிர்க் காதல்
இன்பம் தொடர்ந்திடும் சீர்--நன்றே
அன்பின் ஒளியில் அகன்றிடும் பேதமை
துன்பம் துடைத்ததுப் போம்.
அன்பே இறையென ஆற்றிடும் பக்தியாம்
மன்னுயிர்க் கெல்லாம் துணை--நன்றும்
பழகும் அன்பும் பரவும் உறவும்
வரவதில் வாழும் உலகு.
அன்பில் நிறைந்த.அருளுறை உள்ளம்
ஒன்றிலே இல்லையே கள்ளம்--நின்ற
அன்பதன் ஆண்டான் அனைத்தான் இயற்கை
மன்னுயிர் காப்பனே காப்பு,
கொ.பெ .பி.அய்யா.