புறாக்கூண்டினுள் புத்தனாகிறேன்-வித்யா

புறாக்கூண்டினுள் புத்தனாகிறேன்

புழுதிக்காடுகளின்
தூசுகளை போல
இன்றைக்கெல்லாம்
என் மூச்சோடு
கலந்து விட்டாய்........!

என் தனிமையில்
நீ நுழையும் போது,
எப்படி நான் இருக்கின்றேன்.?
எப்படி இருந்தேன்....?
எப்படி இருக்க போகிறேன்....?

எனக்காக இன்னுமின்னும்
காத்திருக்கும்
அதிர்ச்சிகள் தான்
என்ன......?

எதுவாக நான்
இருக்க போகிறேன்.....?

திருடனா......?
கொலைகாரனா....?
பிச்சைக்காரனா...?
வழிப்போக்கனா......?
நீ கதவு
திறக்கும் போது.......?

இந்த தனிமை
மீண்டும் மீண்டும்
என் மீது
போர் தொடுத்து
கொண்டிருக்கிறது........?

இந்த வெறுமை
என்னை கொள்ளாமல்
கொன்று கொண்டிருக்கிறது......?

எங்கே அந்த கோடு.......?
சரிக்கும் தவறுக்கும்
இடையே நீ போட்ட
கோடு........?

எங்கே அந்த
முடிவிலா பாடலின்
முடிவு.........?

கதகதப்பான
புறாக்கூண்டினுள்
கண்ணயர்ந்து
புத்தனாகிறேன்.........!

கொலையான என்
இரவுகள் மறு
பரிசீலனை செய்கையில்
அங்கே நீ இல்லை.......!
உன் நினைவுகள்
மட்டுமே...!

அழைக்கிறார்கள்....
என் பெயர் சொல்லி
அவர்கள் அழைக்கிறார்கள்....
அந்த முடிவிலா
பாடலின் முடிவு
போல..........!

*****கொலையுண்ட தனிமையின் மறுபரிசீலனை****

எழுதியவர் : வித்யா (5-Mar-14, 9:00 pm)
பார்வை : 347

மேலே