இப்போதே கற்றுக்கொள் என்னுயிரே

கண்ணே ராஜா
மணியே மாணிக்கமே
உன் புன்னகையில்
உலகை மறந்தேனே....!

தவழும் வயதிலேயே
புன்னகை மாறாமல்
கற்றுக்கொள்
அனைத்தையும் முத்தே..!

உண்மையைப் பேசி
நல்லதை நினைத்து
நீ வாழ வேண்டும்
அரிச்சந்திரன் போலவே...!

தீமையை ஒழிக்க
நெருப்பாக வேண்டும்
பார் போற்றும்
பாரதிபோல் என் விழியே..!

பெண்களை மதிக்க
இப்போதிருந்தே
கற்றுத் தரவேண்டும்
என் செல்லமே உனக்கு.!

ஒன்றில் இருக்கும் நீ
ஐந்திலேயே வளைந்துவிடு
இல்லாவிட்டால்
ஐம்பதிலும் வளையமாட்டாய்..!

கண்ணே ராஜா
மணியே மாணிக்கமே
உன் புன்னகையில்
உலகை மறந்தேனே....!!!!!!!!
============================================

எழுதியவர் : சுசானா (25-Dec-13, 4:20 pm)
பார்வை : 530

மேலே