ஏழைகள்

அத்தியாவசிய தேவைகள் கூட
இவர்களுக்கு அனாவசியமாகிறது.

உண்டுபெருக்கும் கூட்டம் மத்தியிலே
ஒரு உருண்டை சோறு கண்டால்
போதுமென்று கூறுகிறது
இவர்கள் வயிறு.

குழு குழு அறைகளிலும்
உறக்கமில்லாது,
மருந்திட்டு
மயக்கமுறும் மானிடர் மத்தியிலே,
மண்தரை மடியாக்கி
விண்மீன்கள் அதை நோக்கி
விழித்திரை மூடி
இடைவிழித்திடாமல்
தூங்குகிறார்கள்.

விழாக்காலங்களிலும்கூட
இவர்கள் நிழலும்
விழுவதில்லை
புத்தாடையின்மேல்..

பலகாரங்கள்:
பசியாருவதே பலநேரங்களில்
பகர்க்கனவானபோது
பல்லில்பட கசப்பாகி பதரிவோடுகிறது..

ஏக்கர் கணக்கிலே ஏப்பம் விடுகிறார்கள்
இவர்கள் இறந்தாலோ
புதைபதற்க்கில்லை இடங்கள்.
இறுகிய நிலங்கள் (மனங்கள்)
ஈரமில்லை அதனுள்ளே.

என்தேசம் ஏழைஎன்னும்
கூரையால் வேயப்பட்டிருக்கிறது
ஏணியில் ஏருவோரெல்லாம்
இவர்களை ஏத்துவோம் என்கிறார்கள்
ஏக்கம் கொண்ட கண்களாய்
ஏமாற்றமே வாழ்கையாய்
பொழுதுகள் தினம் தினம் புலருகிறது
இவர்கள் வாழ்க்கை மட்டும் இருளிலே
இன்னும் இழுத்தடிக்கப்பட்டுகொண்டிருக்கிறது..

எழுதியவர் : Bala (31-Oct-13, 7:38 pm)
பார்வை : 141

மேலே