மனம் திறக்கிறேன் - தீபாவளி
மனம் திறக்கிறேன் - தீபாவளி
இது கடந்த ஒரு ஏழு வருஷமாவே என்னோட மனசை விட்டு தள்ளி போன ஒரு விஷயம் ,,,சொல்லப்போனா எல்லா பண்டிகைக்கும் நான் குடுத்து வைக்காதவன் என்றுதான் சொல்லணும்
காலையிலேயே அக்கா போன் பண்ணிட்டா மூணு மணி நேரம்,, அவளோட தீபாவளிய எனக்கு டெடிகேட் பண்ணிட்டா ,,,, ஆனா அழாமே டெடிகேட் பண்ணிட்டா ,,,
என் கண்ணு முன்னாடி ரத்தம் சொட்ட விழுந்த விபத்தில் இறந்த எனக்கு நிச்சயம் செய்த அவளுக்கு தீபாவளி தான் எல்லாமே என்றால் மிகையில்லை,,
வட இந்தியாவில தான் தீபாவளி பண்டிகை மிக விமரிசையாக கொண்டாடப்படுவதும் கூட
அதுக்கப்புறம் ,,, எல்லா சந்தோஷங்களிலும் பங்கெடுக்கும் ஆர்வம் சற்று குறைந்தே காணப்பட்டது என்னிடம்,,,
அப்பா மட்டும் தனியா எதிர்பார்த்துட்டு இருப்பாரு ...அம்மா இல்லாத வீட்ல அப்பாதான் எல்லாமே,,, சராசரி நாட்களை விட பண்டிகை நாட்கள் ல,, அவருக்கு எங்கள் மீதான எதிர்ப்பார்ப்பு சற்று கூடுதலாவே இருக்கும்
அக்கா ஊருக்கு போய்டுவா ரெண்டு நாளைக்கு முன்னாடியே
அப்பாவும் அக்காவும்,,, தீபாவளி முதல் நாள் இரவு விடிய விடிய எனக்கான புது துணியோட காத்துகிட்டே இருப்பாங்க,,, ஆர்வம் இல்லைன்னாலும்,,, அப்பா அக்கா,, ஓட காத்திருப்புகளுக்கு என்றுமே மதிப்பு அதிகம்,,,, என்னை காணும் அந்த ஒரு நொடி,,, அவங்களோடந்த கண்ணீர் சொல்லிடும்,,,, அதை
இது வரைக்கும் எவ்வளவோ சம்பாதிச்கிட்டேன்னு சொல்றதுதான் ஹாஹ் ஹாஹ் ஹாஹ் ,, தீவாளின்னாலே அப்பாதான் எனக்கு துணி எடுப்பாரு ,,,
அக்கா,,, அப்பாக்காக போன நாட்களும்,,அவங்க ரெண்டு பேருக்காக நான் போன நாட்களும்,,,, அந்த காத்திருப்புகள் எல்லாமே இன்றைக்கு ஒரு "இலைமறைகாய் சுவடுகளாக " கடந்த மூணு வருஷமா,,, வீடு பூட்டிய படிதான் கெடக்கு,,,, அப்பா தவரிட்டதனாலே
அக்கா கிட்டே நா போட்ட அக்ரீமெண்ட் படி ,,, அவ எல்லா பண்டிகை நாட்கள் ளையும்,,,, எனக்கு கால் பண்ணி அழாமே அவளோட சந்தோஷங்களை மட்டும் எனக்கு டெடிகேட் பண்ணுவா ,,, நாளைக்கும்,,, கால் பண்ணுவா ,,,
அவளுக்கு தெரியாது ஆறுதல் அவளுக்கு நான்தான்,,, என்று நான் நினைக்கும் ஒவ்வொரு நொடியும் காய்ந்த என் தொண்டைக் குழி வெற்று மிடறல் ,,, அடைப்பட்டு போகிற வேதனையை ,,,, தந்தைப் பிரியாள் அவளுக்கொரு தந்தையாய்
நான் ,,,,,,,
உறவுகளே :)
இந்த பிரபஞ்சத்தில் நாம் யாருக்கு வேண்டுமானாலும் முக்கியப்படாதவர்களாகவும்,, வேண்டப்படாதவர்களாகவும் இருக்கலாம்,,இருந்தாலும் யாரோ ஒருவருக்கு எதோ ஒரு வகையில் நாம் வேண்டப்பட்டவர்களாகவேதான் இருக்கிறோம் உறவுகளே
எனிவே ஹேப்பி தீபாவளி எவ்ரிபடி :)