என் காதல் தேவதைக்கு

இரவின் மனது
நிலவுக்கு புரியும் .......!
இசையின் அருமை
பாடல்களுக்கு தெரியும் ......!
பூக்களின் வாசம்
வண்டு அது அறியும் .....!
என் காதலி உன் நேசம்
எனக்கு மட்டும் தான் தெரியும்......!

நதியின் பயணம்
கடல்வரை தொடரும் .....!
வெயில் படும் வரையில்
பனித்துளி பயணம்......!
தேடல்கள் உள்ளவரை
தென்றலின் பயணம்......!
அன்பே ....!
ஊடல்கள் இல்லாவிட்டாலும்
உன்னோடுதான் உயிருள்ளவரை
என் பயணம்.....!

காற்றில்லா தேசத்தில்
தென்றலோ புதுமை.....!
காசில்லா குடும்பத்தில்
பொன்பொருள் புதுமை....!
கர்நாடகம் தலையிடாத
காவிரி நீர் புதுமை.....!
என் கவித்துவமான இதயத்திற்கு
உன் காதல் தான் புதுமை.....!

நீ வந்த நெஞ்சுக்குள்
பூகம்ப நடுக்கம் ......!
உன் பார்வை பட்டாலே
பூ கூட நடக்கும்.....!
என் தேசம் எப்போதும்
உனக்குள்ளே அடக்கம்....! -இனி
என் வாழ்க்கை கடலுக்குள்
அலை வந்து அடிக்கும்.....!

எழுதியவர் : பாக்யா (1-Nov-13, 7:24 pm)
சேர்த்தது : bakya
பார்வை : 80

மேலே