தீபாவளி வாழ்த்து

ஆயிரம் மனத்தினில் ஆழங் கிடப்பினும்
காயம் அழுக்கது கழுவுதல்-அதுபோல்
தேய்த்துத் துலக்கித் தெரிவது தொலைத்து
வேய்வம் தலையும் முழுக்கி.

பழையனக் களைத்துப் புதியனத் திருத்தி
விழைவதும் நலமெனப் பொருத்தி-இனியும்
விளைவதும் வளமே விளையட்டும் என்றே
விளக்குகள் வரிசை ஒளிரட்டும்!

பாவங்கள் தீர்த்தப் பழங்கதைச் சொல்லும்
தீபா வளியிதைக் கொள்வம்-நன்றே
மேவிட வழியதுங் காண்பம் நின்றே
கூவினன் தீபாவளி வாழ்த்தே!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (2-Nov-13, 12:15 am)
பார்வை : 122

மேலே