தூக்குச்சட்டி---------------அகன்
அப்பா
குடிக்காமல் முழுக்கூலி கொடுத்தால்
அம்மா வைப்பாள் மீன்குழம்பு
எப்போதாவது
வீட்டில்
மணக்கும்
பொரியலில் காய்கள் இருக்கும்
அரிசி சோறாய் இருக்கும்
பள்ளியில்
எப்போதும் மதிய உணவு
குழம்பு, பொரியல்,சோறு,
கூடவே
கல்,புழு,நாற்றம்
தமிழாசான் சொன்னார்
'லே,நாற்றம் என்றால் மணம்"
பாரதியும் சொன்னதாய் சொன்னார்
"தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழிப்போம்"
ஆமாம்
அதனால்தான்
மதிய உணவின் முட்டைகள்
வாத்தியார்களுக்கு
ஜகத்தினை அழிக்கமாட்டோம்
நாங்கள்