பசி போக்குவீர்

பசி வேட்கை ஏனோ பசி தீரவில்லையே .
காலத்துக்கும்.. வாழ்க்கைக்கு.. இடையே .
நேரத்துக்கும்.. நிமிடங்களுக்கும்.. சண்டை .
துக்கத்துக்கும்.. இன்பத்துக்கும்... நடுவே .
பசியால் தவிக்கும் உள்ளங்கள் பல பல .

பசிப் பிணியை, போக்க வருவீர்களோ...
புசித்தவர்கள் எமக்கு, பசி எப்படி புரியும்.
ஏழை சிறுவர்களை பாருங்கள். பசி பசி .
ஏக்கம் நிறைந்த முகத்தை பாருங்கள் பசி.
பசியோ நீங்காத முடிவில்லா தீரா நோய்.

பசிக் கொடுமை தெரியும்,பசியில் வாடுவோருக்கு .
பசி வயிற்றைத் தின்கிறது உலகில் யாரும் அறியாரோ .
பசியோ, வறண்ட வயிற்றுக்கு முடிவில்லா ஏக்கமே...
ஏங்கும் சிறுவர்களை பாருங்கள் ,பசி படுத்தும் வாட்டத்தால்.
பசிக்காக சிறார்கள் கையேந்துகிறார்கள் கவனிப்பார் யாரோ.

கல்லாக இருக்கிறோமே. ஏனோ புரியவில்லை
மாற்றம் வருமோ,வறுமை எப்போ மாறுமோ,
வேலை இல்லா பிரச்சனைக்குள் மாட்டாதே ...
முயற்சி இன்றி வெட்டியாக இருக்காலமோ.
மூன்று நேரம் குழந்தைகளுக்கு உணவில்லையே .

பசியால் போதியளவு போசாக்கு இன்மையே .
பசியை உணராதவர்கள் யாரும் உண்டோ .
பசியை எல்லோருக்கும் உணரத் தெரியுமே .
மனம் திறந்து இல்லாதவர்களுக்கு உதவுவோமே ...
பெண்களே கண் திறவுங்கள் .கை கொடுங்கள் ...

உலகில் பசியை மட்டும் உணர வைத்தாய்.
தீரா பசி என்று நிறையுமோ இந்த உலகில்.
காதல் பசிதான், உணவிருந்தும் பட்டினி
பிள்ளை அழும் குரல் கேட்க வில்லையோ ...
பிஞ்சு உள்ளங்களின் பசி தீர்ப்போர் யாரோ .

பளிச்சிடும் குழந்தைகளின் முகத்தில் ஏக்கம்.
பிஞ்சுகள் துடி துடிக்கும், பசி வாட்டும் துயரம் .
பசியால் ஒட்டிய வயிறு ,ஊதுவது எப்படியோ .
பகை ,பொறாமை பசியைகளை நிறுத்தி விடு.
பசியும்,பட்டினியும்,வறுமையும் சூழ்ந்த சிறுவர்கள்.

இந்த குழந்தைகள் வாழ்கையில் பசி விளையாட்டு .
நிழல் முகம் கொண்டு பலர், ஆடம்பர வாழ்க்கை .
வீண், வீண் செலவு. வேசம் போடுவோர் பல பலர் .
பண்டிகைக்கு வெட்டி செலவு,பணம் பணம் ஆடம்பரம். அடுத்தவர்கள்(ஏற்கங்களை ) மனங்களை யார் அறிவார்.

வட்டி பணத்தில் சந்தோசம்.வாடி வாடி உழைக்கும்.
கணவனின் கஷ்டம் புரிவது எப்போது பெண்ணே .
ஆடம்பரத்தை நிறுத்திவிடு, உணர்ந்து நீயும் வாழ்ந்துவிடு. பண்டிகை எதற்கு ? புதுத்துணி எதற்கு ? ஆடம்பரம் எதற்கு ?.
ஒற்றுமையாக இருப்போம்,இல்லாதவருக்கு கை கொடுப்போம்.

எழுதியவர் : (3-Nov-13, 9:45 pm)
பார்வை : 443

சிறந்த கவிதைகள்

மேலே