என் நண்பனுக்கு
நண்பா அன்புடன் பேசினாய் .
நட்புடன் இணைந்தே இருந்தாய் .
கேள்விகளும் அடுக்கி அடுக்கியே .
என் மனதை வலிக்க செய்தாய் ...
உண்மையான என் மனதை
பொய் என்ற முத்திரை பதித்தாய் .
கோபம் வந்தால் என்னிடம் கேள்வி .
ஆறுதலாக இருந்து யோசித்து விட்டு.
என்னை நீயும் புரிந்து கொண்டாய் .
அடுக்கிய பல பல கேள்விகளில்
சில கேள்வி சரியாகவே இருந்தது ..
கோட்டில் பல பல கேள்விகள் .
ஆம் அது சரியே .குற்றம் செய்யாத,
என்னிடமோ பல பல கேள்வி அப்பப்பா .
நம்பிக்கை இல்லா கேள்விகள் ...
அன்று உடைந்து போனேன் நானே .
நம்பிக்கை இல்லாத நட்போ.
அடடா அது எதற்கு வீணே .
மறுபடி என்னிடம் வந்தாய் .
அன்புடன் நட்புடன் கூடினாய் .
அன்பை வெளிப் படுத்திய.
என் நெருங்கிய நண்பா ...
அழியாத நாட்கள் வேண்டும் .
உந்தன் அன்பை புரிந்துவிட .
அழகாக தலையை வாரி விட,
நானோ கண் கலங்கி விட்டேன்.
இனிய அழகான பொழுதுகளில்
வணக்கங்கள் பல கூறிவந்துடுவாய் .
என் உயிர் நண்பா. நீ வாழ்க வளமுடன் .

