தமிழகப் பெருமை
அன்பு நண்பர்களே! இரண்டு நாட்களுக்கு முன்தான் என் கடைக் கோடி நண்பன் வாங்கிய போனஸ் பணம் ஒழுங்காக வீடு போய் சேரவேண்டுமே என்ற ஆதங்கத்தில் "பண்டிகை இலக்கு"என்ற தலைப்பில் நம் தளத்தில் ஒரு கவிதையைப் பதிவு செய்தேன்.
இன்றைய முக்கிய செய்தி என்ன தெரியுமா?இந்த தீபாவளிக்கு கடந்த மூன்று நாட்களில் மட்டும் டாஸ்மாக் விற்பனை 330 கோடியாம்.இது சென்ற ஆண்டு விற்பனையை விட 80 கோடி அதிகமாம்.இதுதான் தமிழகமே பெருமையடித்துக் கொள்ளும் இன்றைய முக்கிய செய்தி.இதை பெருமையாக அறிவிக்க தமிழக அரசு கொஞ்சம் கூட வெட்கமோ,கூச்சமோ படுவதில்லை.
இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்யும் அரசாங்கத்துக்கு எங்கே இருக்கப் போகிறது,வெட்கமும் மானமும்?
நாம்தான் இனி தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ள வெட்கப் பட வேண்டும்.
ஏற்கனவே இவர்களின் தயவால் மக்கள் கண்ட நேரத்தில் குடித்துக் கண்ட இடங்களில் கண்ட உணவுகளை சாப்பிட்டு சர்க்கரை ,கேன்சர் ,சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்களால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு பெருமையும் தமிழகத்திற்கு ரொம்பத் தேவைதான்.

