இணையதளத்தில் இதுவும் ஒரு கவிதை
என்கவிதை அரங்கேற்ற புதுநுழைவு கண்டேன்
எழுத்து இணையதளத்தை எண்ணி மகிழ்ந்தேன்
என்தமிழை அரங்கேற்ற இவ்வசால் திறந்தேன்
என்கற்பனையை இங்கு அள்ளி இறைப்பேன்
இளையவன் நான் எழுதிவைப்பேன்
இனிபலநூறு கவிதை குவிப்பேன்
இமையத்தில் கொடியை நாட்டுவேன்
இதயத்தில் ராஜ்யம் சூட்டுவேன்
என்கவிதை வானம் கண்டுவிட்டது
என்வார்த்தை சிறகை கொண்டுவிட்டது
என்சிந்தை பறக்க முயன்றுவிட்டது
என்நினைவு சொர்கத்தையும் தாண்டிவிட்டது
இங்குள்ளோர் நட்பைநோக்கும் என்கவிதை
இவ்வணம் பகிர்ந்துதிடுவோம் பலகவிதை
இளையவன் நான்வடித்த முதல்கவிதை
இணையதளத்தில் இதுவும் ஓர்கவிதை