நானும் நிலவும்
நானும் நிலவும்
ஒரு குலமே
பூமியை சுற்றுகிறேன்
நான் வலமே
வளர்ந்து தேய்கிறேன்
ஒரு கணம்
தேய்ந்து வளர்கிறேன்
மறுகணம்...
குழப்பமும் மேகமாய்
மறைக்கின்றதே
உறவும் மீனாய்
முறைக்கின்றதே..
கதிரால் நானும்
ஒளிர்ந்தேனே...
நன்றியை மறந்து
மறைத்தேனே...கிரகணமாய்..

