ஸ்ரீ உத்தர சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் - 1
ஸ்ரீ உத்தர சிதம்பரம் நடராஜர் திருக்கோயில்.
"ஸ்ரீ சிவகாம சுந்தரிஅம்பாள் சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜ சுவாமியை நம:"
“ஸ்ரீ உத்தர சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் மகாராஷ்டிராவில் உள்ள சதாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதைச் சுற்றி ஏழு (SAT) மலைகள் (டாரஸ்) அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது. சதாராவில் புனித நதிகளான கிருஷ்ணாவும் வெண்ணாறும் சங்கமிக்கும் இடத்தில் 1985ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் உள்ள சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலைப் பிரதி பலிக்கும் வகையில் "ஸ்ரீ உத்தர சிதம்பரம் நடராஜர் திருக்கோயில்" கட்டப்பட்டுள்ளது.
“ஸ்ரீ சிவகாம சுந்தரிஅம்பாள் சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜ சுவாமி"
இவர்களின் அருளினாலும், மகாசுவாமி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சுவாமிகளின் ஆசியினாலும் மற்றும் முன்னாள் ஸ்ரீ.க.ஷாமன்னா ஷன்பக் அவர்கள் அளித்த விலை மதிப்பற்ற பேராதரவினாலும் பக்த பெருமக்களின் நேசக்கரங்கள் அளித்த நன்கொடைகளாலும் ஸ்ரீ உத்திர சிதம்பரம் நடராஜர் திருக் கோயில் நிர்மாணம் செய்யப்பட்டது
கோயில்அடித்தளம் மே 1981 இல் நல்ல நாளில் பதிக்ப்பட்டது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு அரசாங்கங்கள் நிதி உதவியையும் மற்றும் கேரள அரசு கொடிக் கம்பம் உட்படக் கட்டுமானப்பணிக்குத் தேவையான உயர்தர மரப்பலகைகள் அனைத்தையும் அளித்தது. மகாசுவாமிகளின் கருணையாலும் மனித நேயம் மிக்கவர்கள் வாரி வழங்கிய நன்கொடைகளாலும் நடராஜர் திருக்கோயில் கோபுரங்கள் மற்றும் தெய்வசன்னிதானங்கள் அனைத்தும் கம்பீரமான தோறறத்துடன் தமிழ் நாட்டுக் கோயிலின் அசல் பிரதியாக , அளவில் மிகவும் சிறியதாக இருந்தாலும், மூன்று ஆண்டுகளுககுள் கட்டப்பட்டு சதாராவின் புகழைப் பரப்பியது.
பக்தர்கள் மற்றும் நலவிரும்பிகளின் ஆதரவினாலும் கடுமையான முயற்சிகளினாலும் தங்குதடையின்றி மகாகும்பாபிஷேகம் பாரம்பரிய சம்ப்ரதாய முறைப்படி 1985ஆம் ஆண்டு ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் நாள் காஞ்சி மடாதிபதி மகாசுவாமிகளின் ஆசிகளுடனும் இறைவனின் திருவருளுடனும் வெகு விமரிசையாக நடைப்பெற்றது..
ஏனைய தெய்வங்களின் உருவச்சிலைகளின் பிராணப்ரதிஷ்டை மகாசுவாமிகளின் 91ஆம் வயதில் அவர் விருப்பப்படி காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருக்கரங்களால் செய்விக்கப்பட்டு, கும்பாபிஷேஹம் வெகு குவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இக்கோயில் தமிழகத்தில் உள்ள சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலின் நகலாக மஹாராஷ்ட்ராவில் புனித நதிகளான கிருஷ்ணாவும் வெண்ணாறும் சங்கமிக்கும் இடமும் மற்றும் மிக முககியத்துவம் பெற்ற மாவீரர் சத்தியபதி சிவாஜியின் பிறந்த பூமியுமான சதாராவில் சாது சமர்த்தர் இராமதாசர் சமாதி உள்ள சஜஜின் கார்டுக்கு அருகாமையயில் உள்ளது
ஸ்ரீ நடராஜர் ஆலயம் காஞ்சி காமகோடிபீட நிர்வாகத்தின் கீழ் “பொதுமக்கள் அறக் கட்டளை” எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை, நேசமிக்க பக்தர்களின் ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் சுதந்திரமாகக் கோயிலின் நிகழ்வுகளைக் கவனித்து வருகிறது.
ஸ்ரீ நடராஜப் பெருமான் திருக்கோயில் மகிழ்ச்சிகரமாகத் தனது ஆன்மீக சேவை செய்து 25 வருடங்களை முடித்து வெற்றிகரமாக வெள்ளி விழாவினைக் குதூகலமாகக் கொண்டாடியது. வேத பாராயணம்,வேத சம்ஸ்க்ருத பாடசாலை , வேத விற்பன்னர்களின் மத சார்பான போதனைகளின் பிரசங்கங்கள், இசை மற்றும் பக்திரசம் நிறைந்த கலை நிகழ்ச்சிகள், அன்னதானம்,கோசாலை ஆகியவற்றிற்கானக் கூடங்களை நிறுவியதோடு அல்லாமல் மகாபிஷேகங்கள், ரதோற்சவம், அந்தந்த பருவகாலத்தில் இடம் பெற வேண்டிய திருவிழாக்கள், விளையாட்டு , நடவடிக்கைகளை ஊக்கு விக்கும் பணி ஆகிய செயல்பாடுகளையும் நிர்வாகம் செவ்வனே நடத்தி வருகிறது.
ஸ்ரீ நடராஜர் திருக்கோயில் பிரசித்திப் பெற்றுள்ளதோடு மட்டுமின்றி இலட்சக்கணக்கான பக்தர்களும் யாத்திரிகர்களும் ஸ்ரீ நடராஜப் பெருமான், ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் மற்றுமுள்ள ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ராதா கிருஷ்ணன், ஸ்ரீ மூலநாதேஸ்வரர் - உமாதேவி, நவக்கிரகங்கள் , ஐயப்பன் ஆகியோரைத் தரிசனம் செய்து அவர்கள் அருளைப் பெறுவதற்கும் மகாசுவாமி சந்திர சேகரேந்திர சுவாமிகளின் பாதுகைகளுக்கு மரியாதை கலந்த வணக்கங்களை அர்ப்பணம் செய்வதற்கும் நம் தேசத்தின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வருகை தருகின்றனர்.
ஓம் நமசிவாய !! சிவாய நம : !!
திருச்சிற்றம்பலம்!!
முனைவர்.வெ.வசந்தா.

