செந்தமிழ் பெண்களுக்கு ஓர் சமர்ப்பனம்
Cadbury’s சாக்லெட்டும்,
Pink நிறத்திலே உடைகளும்,
சிறு பிள்ளையின் சிரிப்பும்,
பல பெண்ணின் உயிரை இங்கு ஈர்த்திடும்…
Weekend-u பார்ட்டியிலும்,
Day-to-Day செயலிலும்,
அவள் நேர்கொண்ட பார்வையே,
பல ஆணின் நெஞ்சை இங்கு ஈர்த்திடும்…
“உயிரைக் கொடுப்பவள், அது நீயே நீயடி,
ஊக்கம் கொடுப்பவள், அதுவும் நீயே நீயடி,
நிமிர்ந்த நன்னடை, அது உனக்கே சொந்தமே,
அன்று பாரதி சொன்னந்த,
ஓர் புதுமைப்பெண் இவள்…”
செந்தமிழ் பெண்களே - பெருமையின் சிகரமே,
பொறுமையும் - இமயம் உயரமே,
என கவிஞர்கள் அன்று சொன்னரே…
அழகிலே உயர்ந்தவள், அறிவிலே சிறந்தவள்,
என் தமிழ் இனப் பெண் என,
என் நெஞ்சை நிமர்த்தி நான் சொல்லுவேன்…
“உயிரைக் கொடுப்பவள், அது நீயே நீயடி,
ஊக்கம் கொடுப்பவள், அதுவும் நீயே நீயடி,
நிமிர்ந்த நன்னடை, அது உனக்கே சொந்தமே,
அன்று பாரதி சொன்னந்த,
ஓர் புதுமைப்பெண் இவள்…”
சாத்திரம் கற்பதும், சவுரியம் செய்வதும் - இம்மண்ணின்
இளைய நங்கை கொண்ட எண்ணங்கள்,
பொய்மையை அழிப்பதும், உண்மையை வளர்ப்பதும்,
என் தமிழ் இனப் பெண்ணின் தன்மைகள்…
இப்புவியின் மேலே மனிதர்கள் வாழ்ந்திட,
நீயும் முழுமுதற் காரணம்,
தாளங் கொட்டிடத் திசைகள் அதிர்ந்திட,
உன்தன் பெருமையை பாடனும்,
“உயிரைக் கொடுப்பவள், அது நீயே நீயடி,
ஊக்கம் கொடுப்பவள், அதுவும் நீயே நீயடி,
நிமிர்ந்த நன்னடை, அது உனக்கே சொந்தமே,
அன்று பாரதி சொன்னந்த,
ஓர் புதுமைப்பெண் இவள்…”