தியாகம்

''வாசகர் பார்வைக்கு,"

எனக்கு வெகு நாளாக ஒரு தொடர்கதை எழுத மிகவும் விருப்பம். ஆனால் இன்று இந்த எழுது பக்கத்தினால் என் ஆசை பூர்த்தியாக இருக்கிறது,. இந்த கதையை ஒரே நாளில் எழுத விருப்பம் இல்லை. அதனால் வாரம் ஒரு முறை எழுத உள்ளேன். தயவு செய்து எனக்கு வாசகர்கள் ஆதரவு தர வேண்டுகிறேன்.

"தியாகம்"

அத்தியாயம்-1

குடும்ப உறுப்பினர்கள்:- பார்வதி பாட்டி, குடும்ப தலைவன் காவியன், தலைவி காமாட்சி, இரு பெண்கள் தன்யஸ்ரீ, பாரதி.

ஏம்பா காவி உங்கப்பா இறந்து ஒரு மாசம் ஆகிருச்சு, இன்னும் ஏன் அதவே நினச்சு மூலையில உட்கார்ந்து இருக்க? இனி நீ தானப்பா எங்க ஆணி வேர், உனக்கு கீழ 3தங்கை, 2தம்பி இருக்காங்க, நீயே இப்டி இடிஞ்சு போய்ட்டா, அவங்களுக்கு யார் ஆறுதல் சொல்றது? எனக்கும் ரொம்ப வயசாகிருச்சு, உனக்கு காலாகாலத்துல, கல்யாணம் பண்ணி வச்சுட்டா நிம்மதியா கண்ண மூடுவேன், யோசிசுகப்பா! வரவ்வ உன்னையும் நம்ம பசங்களையும் பார்த்துப்பா!
அம்மா ,இந்த நிலமையில ஏன்மா கல்யாணம் பத்தி பேசுறேங்க? நம்ம குடும்ப வறுமை நிலை தெரிஞ்சும்.......................?
இல்லப்பா புருஞ்சுக்கோ, நா இன்னிக்கோ நாளைக்கோ........ ?அப்புறம் அனாதையா என்று சொல்லி ஓவென ஓப்பாரி வைக்கிறாள்............... எப்டியோ பேசி காவியை சமாதானம் செய்கிறாள்!
நல்ல வரனையும் பிடித்தாகி விட்டது!
காவியன் மாநிறமான அழகு, நல்ல உயரம், அந்த காலத்திற்கு ஏற்றார் போல் பெல்ஸ் பேன்ட்,நன்றாக படிய வாரிய தலை முடி,குணத்தில் காவிக்கு ஈடு இணை இல்லை!
இவருக்கு ஏற்ற குணவதியாய் காமாட்சி, நல்ல சிவப்பு, அழகான முகம்,குடும்ப பாங்கான குணம்.....
காவியன் வீட்டில் வரதட்சணை பற்றி பேசாததால் வறுமை காரணமாக 5பவுன் நகையுடன் இல்லறத்தில் இணைகிறாள்! (அந்த காலத்தில் 5பவுன் 50 பவுனுக்கு சமம்)
முதலிரவு...............
(அடுத்த வாரம் தொடரும்)

எழுதியவர் : elakkiyam (6-Nov-13, 1:02 pm)
Tanglish : thiyaagam
பார்வை : 232

மேலே