+அன்பரே இதுவும் முறையோ+

அன்பினை வளர்க்கச் சொல்லி
அகிலத்தில் அனுப்பி வைத்தால்
அதைமட்டும் மறந்து விட்டு
அகிலத்தை பிளந்து விட்டான்!

அன்பதை வணங்கச் சொல்லி
அறிவுரை சொல்லி வைத்தால்
அதற்கொரு குழியைத் தோண்டி
அடக்கமாய் புதைத்து விட்டான்!

அன்பிற்கும் விலையை பேசி
அவனவன் அலையும் போது
அன்பினைச் சொல்ல வந்த
அனைவரும் சிதைந்து போனர்!

அன்பாலே உலகில் வந்து
அன்பாலே வளர்ந்து நின்றும்
அப்பாலே தள்ளி விட்டோம்
அன்பரே இதுவும் முறையோ!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (6-Nov-13, 8:37 pm)
பார்வை : 93

மேலே