அடச்சீ தமிழனே

சூடு இல்லை சொரணை இல்லை
மானம் இல்லை ரோஷம் இல்லை
தமிழனுக்கு தமிழனத்தின் மீது
அக்கறையில்லை ஆசையில்லை

அதர்மத்தை எதிர்க்க துணிவில்லை
அரசாங்கத்தை தட்டிகேட்க நாதியில்லை
இலவசத்தை வாங்க கூச்சமில்லை
தன்மானம் அடமானமாகிறது தெரியவில்லை.

இனத்தை அழித்தது இந்தியா
தமிழனே வேடிக்கை பார்த்தாயோ?
ஈழத்தில் வடிகிறதே இரத்தம்
உறவுகளே உனக்கில்லையா பதற்றம் ?

உன் வீரம் எங்கே ?
உன் தன்மானம் எங்கே?
இத்தாலியின் சேலையில் சிக்கிவிட்டதோ?
நடிகையின் மோகத்தில் மயங்கிவிட்டதோ?

தமிழனை ஆள
தமிழச்சி இல்லையோ ?
இலவச மிக்சியில்
சொரணை நசுங்கி விட்டதோ?

மஞ்சள் சால்வையில்
நாத்தீக வாடை.....!
அடுக்கு வசனங்களில்
அடங்கி போனாயோ ?

எருமை மழையில்தான் நனையும்
அருமை தமிழர்களே !
பொறுமையாகவே இருங்கள்... !

ஆம் ! உங்களுத்தானே
சூடு இல்லை சொரனையில்லைதானே ?
வெட்கமில்லை ரோஷமில்லைதானே ?

----------------------------------------------------------------------------
விதிகளே !!
விதிகளை தளர்த்திவிடு
விதியினை மாற்றிட
நான் இன்னும் எழுதிட வேண்டும்.
எம் இனத்திற்கு உணர்ச்சி வரும் வரை............


--------------இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (6-Nov-13, 7:59 pm)
பார்வை : 359

மேலே