உன் சிரிப்பு
உன் புன்னகையில்
பூவையிவள்
பூலோகம் மறக்கிறாள்....
உதடு விரித்து நீ
சிரிக்கும்போதெல்லாம்
உதிரம் உறைந்து
உருகி நிற்கிறாள்...
சிவந்த உதடுகளின்
படர்ந்திருக்கும் குறுஞ்சிரிப்பால்
பின்னிய வலையில் சிக்கிய
சிலந்தியாகிறாள்....
நீ ஒரு முறை தான் சிரிக்கிறாய்
அதை நினைத்தே
இவள் பல முறை சாகிறாள்.....
சிரிப்பிலே எனை ஆள்கிறாய்
சிந்தைக்குள் நீயே
நிறைந்து நிற்கிறாய்....
-PRIYAKARTHIKEYAN