விழிகளில் தெரியும் வண்ணங்கள்
விழித்ததும் காட்சிகள்
விழிகளில் வண்ணங்கள்
நினைத்திடின் நேர்மறை
நினைவுகள் நெஞ்சினில்
கருமையும் மங்கலம்
கருத்துக்கள் நேர்பதம்
அழுதிடப் பொழுதில்லை இனி
அழகிய விடியல்கள் - எனவே
விழித்ததும் காட்சிகள்
விழிகளில் வண்ணங்கள்