அருவருக்க தக்கவன்

சாதியின் பெயர் சொல்லி
சாக்கடையில் வாழும்
மனிதா கேள் ?
நீ சாதியை பார்ப்பவன் என்றால்
உடனே நிறுத்தி விடு உன்
மூச்சினை
நீ சுவாசிக்கும் காற்றினில்
வேறு ஒரு சாதியினரின்
சுவாசம் கலந்து இருக்கிறதாம் ,
மதி கெட்டவனே
நீ உடுத்தும் உடையும்
நீ உண்ணும் உணவும்
உப்பினையும் விளைவிப்பது
வேறு ஒரு சாதியினர் தான் என்று
தெரிந்தும் உண்கின்ற நீ
மனிதன் இல்லை
சாக்கடையில் வாழும்
புழுவினை விட
அருவருக்க தக்கவன்
தான் எனக்கு ..........
இங்கு உணர்ச்சி வசப்பட்டவன்
தமிழன் இல்லை,
உணர்ச்சியை உருவாக்குபவர்கள்
தான் தமிழன்...
நான் தமிழன் என்று பெருமையாக சொல்லிடுவேன் ......

எழுதியவர் : ப்ரியாஅசோக் (11-Nov-13, 2:09 pm)
பார்வை : 94

மேலே