amma

''பாட்டி எங்கே என் உடுப்பு காலைல ரயில்வே ஸ்டேஷன் போய் பத்திரிகை விக்கணும் டைம் ஆச்சு வித்து காச கொண்டு வந்தா தான் கஞ்சி குடிக்க முடியும்''.''ஆமாம் சீக்கிரம் போய் காச கொண்டாபா நேத்து குடிச்ச கஞ்சி தான் வயுருல ஓட்டிக்கிட்டு இருக்கு மனசாட்சியே இல்லாம உங்க அம்மாவும் வெளிநாடு போய்ட்டா போய் ஒரு வருஷமாச்சு காசும் அனுப்புறது கிடையாது ஒரு லெட்டெர கூட காணம் நீ என்னடான இவளோ கஷ்டபடர எப்ப தான் வருவளோ? அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்''.'' சும்மா எந்த நேரமும் அம்மாவை திட்டாதிங்க பாட்டி அப்பா செத்ததுல இருந்து அம்மா வெளிநாடு போய் எவளோ கஷ்டப்படறாங்க இன்னும் கொஞ்ச நாளைல மொத்தமா சம்பாரிச்சுகிட்டு வருவாங்க அப்ப நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்துரும் சரி பாட்டி நான் கெளம்புறேன்
''பேப்பர் பேப்பர் அம்மா பேப்பர் அய்யா பேப்பர் தினகரன் தின ஒலி எல்லாம் இருக்குரெண்டு ரூபாய் தான்''.''ஒரு பேப்பர் குடுப்பா''. ''இந்தாக அம்மா'' சற்று முன்னால் போன ஒரு பெண்ணின் மேல் இவனின் கவனம் பட்டது.அப் பெண்ணின் தோளை தட்டி அம்மா கொஞ்சம் திரும்புங்க அவனின் உள்ளத்தில் நொடிபொழுதில் ஒரு மின்னல் தாக்குவது போல இருந்தது ''அம்மா நீங்களா வரேன்னு ஒரு லெட்டெர் போற்றுக்கலமே என்னால் நம்பவே முடியலம்மா பார்த்து ஒரு வருஷம் ஆச்சு ஊருக்கு வராம இங்க யாரம்மா தேடிக்கிட்டு இருக்கீங்க ஓ இன்ப அதிர்ச்சி தரலாம்னு நெனச்சிங்களா?வாங்க அம்மா வீட்டுக்கு போகலாம் பைய தாங்க யாரும்மா இந்த சார் யார் இந்த சின்ன பொண்ணு'' .''என்னங்க சில்லற காசு இல்ல இருந்தா குடுத்து ஒரு பேப்பர் வாங்குங்க பாவம் பைத்தியகார பையன் போல ஒளறி கிட்டு இருக்கான்'' அவனின் நெஞ்சை கோடி இடிகள் ஒன்றிணைந்து தாக்குவது போல இருந்தது தாயையே நம்பி வாழ்கை நடத்திய அவன் ரயில் நிலையத்திலேயே தன் வாழ்வை முடித்து கொண்டான்.

எழுதியவர் : harshitha (11-Nov-13, 6:58 pm)
பார்வை : 289

மேலே