இரண்டாம் அத்தியாயம்-26

முத்துவிற்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த மருத்துவர் வந்தார் அவரிடம் மதன் முத்துவின் நிலை பற்றி கேட்டான்

"கொஞ்சம் காம்ப்ளிகேட் தான் , இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது எதையுமே மார்னிங் தான் சொல்ல முடியும், god is great "- என்று சொல்லிவிட்டு போனார்

அவர் பேசுவதிலே தெரிந்தது முத்துவின் நிலை

அங்கு இருந்த அனைவரும் துக்க கடலில் முழ்கிவிடுவோமோ என்ற பயம் , முத்துவின் நிலை பற்றிய கவலை

நிலாவின் நிலை,,,,,,,,,, சொல்லி மாளாத துயரத்தில் இருந்தாள்

கதவின் கண்ணாடி துவாரத்தில் வழியே பார்த்தான் மதன்

முகத்தில் ஆக்சிஜென் மாஸ்க், தலையில் கட்டு
மார்பில் இசிஜி வீதம் மருத்துவ உபகரணங்கள் முத்துவின் மீது ,,,,,,,,,,

அவர் இன்னும் உயிரோடு தான் இருக்கிறான் என்று சொல்லி வளைந்து நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது இசிஜி மீட்டர் ,,,,,,,,,,,

அதையெல்லாம் பார்த்த மதன் கண்ணீர் சிந்தினான்

நிலா மனதிற்குள் பிராத்தித்த வண்ணம் இருந்தாள் அந்த இரவு நிலாவிற்கு வாழ்வா??? சாவா??? போராட்டம்,,,,,,,,,,,

தன் தங்கையின் வாழ்வு உள்ளே ஊசல் ஆடிகொண்டிருக்கிறது , "இறைவா இனியாவது
அவள் வாழ வேண்டும் " என்று மனதிற்குள் வேண்டிகொண்டிருந்தார் சந்தோஷ்

ஒரு முழு இரவின் போராட்டத்தில், நிலா முத்துவை பார்க்க அறையின் உள்ளே போனாள்.

எந்த முகம் அவளை கவர்ந்ததோ, எந்த முகத்தை காலம் முழுவதும் பார்த்து வாழ ஆசைப்பட்டலோ அதில் இரத்த சுவடுகள், தலையில் தையல்,,,,,,,,,,

மெல்ல முத்துவின் வலக்கரத்தை பற்றினாள். அவனிடம் எந்த அசைவும் இல்லை, அந்த அறை முழுவதும் நிசப்தம்

முத்துவின் உயிர் கோடுகளை காட்டிகொண்டிருந்த இசிஜி மட்டுமே சப்தமிட்டு முத்துவின் இருப்பை சொல்லி காட்டியது

நிலா முத்துவின் கரங்களில் முகம் புதைத்தாள், எத்தனை ஆண்டுகால தவம் இது,,,,,,,,,,

நிலாவின் மனம் பேசியது,"முத்து உங்களுக்கு ஏதும் ஆகாது,,,,,,,, நீங்க நல்ல படியா என்கிட்டே வருவீங்க,,,, நாம நிச்சயமா சந்தோசமா வாழ்வோம் ,,,,, நான் உங்கள விட்டுகொடுக்க மாட்டேன்,,,,,,,,, I லவ் யு முத்து,,,, I LOVE YOU so much ,,,,,,,, I Cant to live without யு,,,,,,,,,,, I always be with யு ,,,,,,,,,,,,,,,"

மனதின் பாரம் தாங்காமல் விழியில் அருவி

நிலாவின் கண்ணீர் துளிகள் முத்துவின் கரங்களில் வழிந்தோடியது

சட்டென்று கை கால்கள் வெட்ட ஆரம்பித்தன முத்துவிற்கு

என்ன நடக்கிறது என்று தெரியாமல் பதறினாள் நிலா

"டாக்டர்,,,,,, டாக்டர் ,,,,,,,,,"- வெளியே ஓடினாள்,

சந்தோஷ் ,"என்ன மா ஆச்சு நிலா என்னாச்சு"

"அண்ணா அவருக்கு,,,,,,,,"

மதனும் சுந்தரும் மருத்துவரின் அறையை நோக்கி ஓடினார்கள்

சற்று நேரத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் என்று அந்த இடமே கலோபரமானது

மதன் மீண்டும் அந்த கண்ணாடி வழி பார்த்தான்

மருத்துவர் முத்துவின் இதயத்தை மின்சாரம் கொண்டு உயிர்ப்பிக்க முயற்சி செய்கிறார்

அவன் பார்த்து கொண்டிருக்கும்போதே ஒரு செவிலி அந்த அறையில் திரை சீலையால் அந்த கண்ணாடி வழியையும் மறைத்துவிட்டார்,,,,,,,,,,

விடிந்தால் தெரியும் !!!!!!!!!!!!!!!

எழுதியவர் : நிலா மகள் (11-Nov-13, 4:40 pm)
பார்வை : 243

மேலே