நன்றி

ஒருவருக்கொருவர்
கொடுக்கும் சன்மானம்!

செய்த உதவிக்கு
செலவில்லாத பரிசு!

சிலருக்கு
அரசன் கொடுக்கும்
பொற்காசு!

சிலருக்கு
பிச்சை போடும்
செல்லாகாசு!

சிலருக்கு
இதயத்திலிருந்து
வரும்!

சிலருக்கு
எச்சிலில் இருந்து
வரும்!

நன்றி மறவாமைக்கு
நாயென்றால்
நன்றி மறப்பதற்கு
மனிதன்!

எல்லோருக்கும்
எல்லாரும் நன்றி
சொல்லுவோம்!

எப்படி?

வாய் தொட்ட
வார்த்தையில் இல்லை!

மெய்யெனபட்ட
வாழ்க்கையில்!

உருவாக்கிய உங்களுக்காக
உயிருள்ளவரை
ஒளிதரும் மெழுகுவர்த்தி!

மழைமேகத்துக்கு
வண்ணமலர் பூத்து
நன்றி தெரிவிக்கும் செடி!

வளர்த்துவிட்ட பூமிக்கு
நிழல் கொடுக்கும் மரம்!

நன்றி
பாராட்டி போட்ட
மாலையாக
இருக்க வேண்டும் !

கேட்டுப் பெரும்
பிச்சையாக
இருக்க கூடாது!

நன்றி சொல்வது
நட்புக்கு
அழகில்லை!

நன்றி எதிர்பார்க்கும்
உறவுக்கு
ஆயுள் அதிகமில்லை!

கடவுளுக்கு
நன்றி சொல்லுவது
பக்தி இல்லை!

நன்றி சொல்லாமை
ஆசிரியருக்கு
அவமானமில்லை!

நான் சொல்லவருவது
இதுதான்
யாரும் யாருக்கும்
நன்றி சொல்லாதீர்கள்!

ஏனெனில் நம்மிடையே
அன்னியம்
நாற்காலியிட்டு விடும்
என்பதால்!

நீயும் நானும்
ஒரேநாட்டில்
வசிக்கிறோம் என்பததை விட
வேறென்ன உறவுவேண்டும்!
* * *

எழுதியவர் : கோடீஸ்வரன் (11-Nov-13, 10:33 pm)
Tanglish : nandri
பார்வை : 126

மேலே