தூங்கினாலும் தூங்கிடாது

இமை தூங்கினாலும்
இதயம் தூங்கிடாது

மண் தூங்கினாலும்
விதை தூங்கிடாது

மலர் தூங்கினாலும்
மணம் தூங்கிடாது

பகை தூங்கினாலும்
உறவு தூங்கிடாது

பூமி தூங்கினாலும்
அதனழகு தூங்கிடாது

பிறப்பு தூங்கினாலும்
இறப்பு தூங்கிடாது

போர் முனை தூங்கினாலும்
ஏர் முனை தூங்கிடாது

நேர்மை தூங்கினாலும்
நேரம் தூங்கிடாது

கடல் தூங்கினாலும்
கடன் தூங்கிடாது

தர்மம் தூங்கினாலும்
தடைகள் தூங்கிடாது

விடை தூங்கினாலும்
வினா தூங்கிடாது

தெய்வம் தூங்கினாலும்
தேவை தூங்கிடாது


-வளர்புரம் யுவராசன்.


முகவரி.
2,கிருஷ்ணன் தெரு,139,காமராசர் சாலை,
ஐசுவர்யம் பிளாட் நம்பர்-A1
கொடுங்கையூர்,சென்னை.
கைபேசியில் : 9444030610

எழுதியவர் : வளர்புரம் யுவராசன் (11-Nov-13, 10:30 pm)
சேர்த்தது : lnuraj
பார்வை : 100

மேலே