“ இந்தியர்களே நன்றாக வாழுங்கள் - இது ஆவிகளின் வாழ்த்து “
அரசென்று சொல்லி இன்றும்
அக்கிரமம் செய்கின்ற
போரென்று சொல்லி இனமழித்து
மனிதர்களைக் கொன்றுகுவித்த
மாபாதகனுக்கு விளக்கக்கடிதமாம்
விழாவில் பங்கேற்காமைக்கு
வருத்தமாம்! வெட்கக்கேடு!
ஏதோ தடுக்கிறதே பம்முகிறமுறையிலே?
அபலைகளின் துயர்துடைப்பதற்கு
உதவுகிறேனென்று சொல்லி
கோடிகோடியாய் கொடுத்ததிலும்
பங்குபோட்டு பதுக்கிக்கொண்டீரோ?
பச்சையாக பகல்கொள்ளையடித்தீரோ?
குட்டு வெளிப்படுத்தப்படுமென்ற பயமோ?
வேஷம் கலையுமென்ற நடுக்கமோ?
யாரழிந்தால் உமக்கென்ன? ம்ம்ம்..
நடத்துங்கள் தொடர்ந்து.... நாடகத்தை!
நன்றாய் இருங்கள்... நீங்கள்!
செய்பவைகளைப் பார்த்து உங்களை
செத்த உயிர்கள் சாபமிடப்போவதில்லை!
பெண்களின் மானமழித்த
ஈனர்களைவிட
பிஞ்சுகளின் உயிர்குடித்த
வெறியர்களைவிட
அப்பாவிகளை கொன்றுகுவித்த கொடியவர்களைவிட
உங்களை மிகநல்லோரென்று
ஆவிகள் வாழ்த்துமையா!
ஆத்மசாந்தியோடு வாழ்த்துமையா!..