நட்பு

ஜாதி மொழி
இனம் மதம்
இவற்றை கடந்தது
நட்பு!!!

இன்னல்கள் பல
வந்தாலும்
இமை என காத்திடும்
நட்பு !!!

உயிரை கொடுத்து
உறவை வளர்த்திடும்
நட்பு !!!

எதனையும் எதிர்பாராமல்
தோல்வியில் தோள் கொடுத்தே
கெடுக்காமல் கொடுப்பதே
நட்பு !!!

அன்பு கொண்ட
நெஞ்சதிற்காக
அடியும் வாங்கிடும்
நட்பு !!!

புண்பட்ட மனதை
பண்பட்டதாக மாற்றி
பாசத்தால் கட்டுண்டு
பண்பினையே கற்றுதருவது
நட்பு !!!

சில நேரங்களில்
சூரியனாக சுட்டெரித்தாலும்
குளிர் தென்றலாக மாற்றுவது
நட்பு !!!

ஆண் பெண் என
பேதங்கள் பாராமல்
சரி நிகர் சமானம் எனும்
சமத்துவத்தை வளர்ப்பது
நட்பு !!!

ஒருவரை ஒருவர்
பாராமலே நட்பு கொண்ட
கோப்பெருஞ் சோழன்
பிசிராந்தையார் போல
சிறந்த நட்புகளும்
வலைதளத்தில் உண்டு !!!

எழுதியவர் : umamaheshwari kannan (11-Nov-13, 10:50 pm)
Tanglish : natpu
பார்வை : 211

மேலே