இந்தியாவும் நாமும்

இந்திய பிரதமர் திரு. மன்மோகன் சிங். ஒரு பெரிய பொருளாதார மேதை, உலகின் அனைத்து பொருளாதாரத்தை பற்றிய அறிவை தன் விரல் நுனியில் வைத்திருக்கும் இவரை பார்த்து உலக நாடுகள் மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியமாக பார்க்கப்பட்ட காலமும் உண்டு. இப்பேர்ப்பட்ட சிறந்த மனிதர் தான் இன்று விதி செய்த மாயத்தினால் சதிக்கார கும்பலிடம் மாட்டிக்கொண்டிருக்கிறார். திரு. மன்மோகன்சிங்கை பார்க்க பரிதாபமாக இருக்கிறது.. அதே வேளையில் அவரின் மீது படுகோபமும் வருகிறது.

தலையில் டர்பன் தலைப்பாகை, முகத்தில் தாடி என்று கம்பீரமான பஞ்சாப் மாநிலத்தை சார்ந்தவர்தான் திரு. மன்மோகன் சிங். ஆனால் அவரிடம் கம்பீரம் இருக்கிறதா...? பஞ்சாபிகள் அவ்வப்போது காட்டும் தன்மான உணர்ச்சியாவது இருக்கிறதா ? எதுவும் இல்லாத உயிருள்ள ஒர் பொம்மையாக திருமதி.சோனியா காந்தியிடம் அடிமையாக சுதந்திர இந்தியாவில் பிரதமராக வேலை பார்க்கிறார். அவமானமாக அவருக்கு தோன்றவில்லை. அவமானம்.... இந்தியன் என்று மார்தட்டிக்கொள்ளும் நமக்கே.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிகட்டப்போரில் இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்ட காங்கிரஸ் அரசின் பிரதமராக இருந்த இவர், அன்று கொஞ்சம் கூட மனிதாபிமான இல்லாதவராகதான் இருந்தார். “அடேய் ! உன் நாட்டில் விடுதலைப்புலிகளை அழிக்கத்தானே உதவி கேட்டாய். ஒன்றும் அறியாத அப்பாவி தமிழர்களை ஏனடா கொல்கிறாய்?” என்று ராஜபக்சேவை கேள்வி கேட்க கூட அதிகாரம் இல்லாத இந்திய பிரதமராக , ஒர் ஈனப்பிறவியாகத்தானே காட்சியளித்தார். அந்த சமயம் இங்கே நம் தமிழ்நாட்டில் நடந்த கூத்துக்கள் வேறு. திரு. கருணாநிதி முதல் சினிமா சீமான் வரை நடித்த நாடகம் வேறு கதை.

அன்றைய சூழ்நிலையில் இங்குள்ள தமிழர்களுக்கு அந்த இறுதிப்போரில் நடந்த விபரீதங்கள் முழுமையாக தெரிவதற்கு முன் இங்கு நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து விட்டது. காங்கிரஸ்-திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடித்தது.. அன்றே இந்தியாவிற்கு மீண்டும் தரித்திரம் பிடித்தது.
அடுத்து... இலங்கை மீது சர்வதேச நாடுகள் பொருளாதார தடை ஏற்படுத்தும் ஒர் சந்தர்ப்பம் கிடைத்தது. அது ஜெனிவாவில் நடைப்பெற்ற ஐ.நா மாநாடு. இனப்படுகொலை செய்த இலங்கை தீவிற்கு கண்டனம் தெரிவித்து உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்த அமெரிக்கா போன்ற நாடுகள் முன்வந்த சூழ்நிலையில் அதனை நீர்த்து போக செய்தது மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு. தமிழ் நாட்டில் இருந்து “ அழுத்தம் “ கொடுத்தும் இந்திய அரசு தந்திர வேலையை ராஜபக்சேவிற்கு ஆதரவாக செய்தது.
இங்கே நாம் ஒன்று கவனித்து ஆக வேண்டும். இலங்கையில் நடந்தது “இனப்படுகொலை” என்ற ரீதியில்தான் அனைத்து முக்கிய உலக நாடுகளும் இலங்கையை தண்டிக்க முன்வந்தன. உலகத்தின் பார்வையில் அது இனப்படுகொலை.. ஆனால் நமக்கு அது தமிழ் இனப்படுகொலை. இந்தியாவில் வசிக்கும் தமிழர்களின் இனத்தின் படுகொலை என்றுதானே இந்தியா பார்த்திருக்க வேண்டும். ஆனால் இந்திய அரசு உலக நாடுகளைப்போல “இனப்படுகொலை “ என்ற சொல்லக்கூட அஞ்சியது.
இதேப்போல மீனவர்களின் பிரச்சினையிலும் இந்திய அரசு ஓரவஞ்சனையாக செயல்படுகிறது. இந்திய மீனவன் என்று சொல்லாமல் தமிழக மீன்வன் என்கிறது இந்திய அரசின் செய்தி குறிப்பு

இதுப்போன்ற நடவடிக்கைகளால் இந்திய அரசு நம்மை நம் தமிழ் இனத்தை பிரித்தே பார்க்கிறது என்ற எண்ணம் நமக்கு மேலோங்கிறது.
இவையனைத்தும் விட இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்தியாவின் சார்பாக யாரும் பங்கேற்க கூடாது என்று தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாக நமது பிரதமரிடம் கெஞ்சி கேட்கப்பட்டது. கெஞ்சி கேட்டதால்தான் என்னவோ பதில் சொல்ல நாட்கள் மிஞ்சிப்போனது. ஒருவழியாக பிரதமர் மாநாட்டிற்கு செல்லமாட்டார் . அமைச்சர் செல்வார் என்றார்கள். சரி பிரதமராவது நம் உணர்ச்சிக்கு மரியாதை கொடுத்து இதையாவது செய்கிறாரே என்று பார்த்தால். அடுத்த நாளே.. ராஜபக்சேவிற்கு தான் மாநாட்டில் பங்கேற்க சூழ்நிலை இல்லை என்று விளக்க கடிதம் எழுதுகிறார் நமது பிரதமர்,,, ஏன்? இந்தியாவை விட சர்வ விதத்திலும் வல்லமை குறைந்த இலங்கையின் ஹிட்லர் ராஜ்பக்சேவிடம் பணிந்து போக வேண்டிய நிர்பந்தம் என்ன ? அங்கே இந்தியா பங்கேற்காவிட்டால் நிகழும் அரசியல் மாற்றம் இந்தியாவில் வாழம் நமக்கும் , இலங்கையில் வாழம் தமிழர்க்கும், புலம் பெயர்ந்த இலங்கையை பிறப்பிடமாக கொண்ட நம் தமிழ் சொந்தங்களுக்கும் ஏதாவது ஆதரவான நிலை உருவாகிவிடும் என்ற அச்சமா? இந்தியாவின் ஒரு பகுதியான தமிழகத்தை விட இலங்கையின் மீது அப்படி என்ன கரிசனம். ?
எதற்கு இந்த நாடகம்?

அந்த கடித்ததில் என்ன விளக்கம் இருக்கும்... ?
“இங்கே தமிழர்களின் ஓட்டு வேண்டும். தேர்தல் நெருங்கி விட்டது. ஆதலால் கொஞ்சமாவது இந்த முட்டாள் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். இந்த முட்டாள்கள் காங்கிரஸ்க்கு ஒட்டு அளித்தப்பிறகு நான் உங்களுடன் கும்மி அடிக்க வருகிறேன் ” என்று அர்த்தத்தில் கண்டிப்பாக எழுதி இருப்பார்.

சொல்லுங்கள் தமிழர்களே ..................!!

நீங்கள் முட்டாள்களா?
நம்மை இந்தியனாக மதிக்காத இந்த காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வேண்டுமா ?
திருமதி சோனியாவின் பொம்மை திரு. மன்மோகன் சிங் அரசு வேண்டுமா ?
உங்களுக்கு உணர்ச்சி உள்ளதா ?
தமிழ் இனத்தை அழித்த இந்த தந்திர காங்கிரஸ் அழிக்கப்பட வேண்டுமா ? வேண்டாமா?

பதில் கூறுங்கள்... தெளிவாக ......... வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில்..
முடிந்தால் "49 O " க்கு வாக்கு அளியுங்கள்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (12-Nov-13, 9:01 am)
பார்வை : 962

சிறந்த கட்டுரைகள்

மேலே