இரவின் ரசிகன் நான்
எத்தனை நாள்,
உறங்கிருப்பேன்,
உன் அழகை காணாமல்,
இன்றொருநாள்,
விழித்து இருப்பேன்,
உன் அழகை நான் காண,
உன் செவ்விதழ்,
வழிந்து வரும்,
தேன் துளியோ,
பனி துளி,
கவிஞர் மனம்,
கொள்ளை கொள்ளும்,
உன் அழகு மகளோ,
நிலவொளி,
சூரியன் உனக்கு,
தந்த,
முத்தங்களின் எண்ணிக்கையா,
நட்சத்திரங்கள்,
கவிஞர்களின்,
காதல் தூது,
கொண்டு வருகிறதா,
மேக மூட்டங்கள்,
உனக்கும் உண்டோ,
பக்கத்துக்கு வீட்டு,
சண்டை,
அதனால் வந்ததா,
இடி,
கண்களை திருடி,
செல்ல,
கை வசம் வைத்து,
இருப்பாயோ,
மின்னல்,
கடலுக்கு,
அடியில்,
உள்ளதா,
உன் வீடு,
கவிஞனின்,
மனதை காயம்,
செய்து,
ஏன் போகிறாய்,
ஒரு நாள்,
விடுப்பு எடுத்து,
முல்லையும் ,
தென்றலும்,
மட்டும் அல்ல,
நானும் தான்,
காதலிக்கிறேன்,
உன்னை,
இனி உறக்கம்,
வந்தாலும்,
உன் நினைவு மாறாது!!!