ஒவ்வொரு பூவும் சொல்கிறதே
ஊனத்தை கிண்டல்,
செய்யும்,
ஈன பிறவிகளே,
கடவுளும் ,அவர்களும்,
ஒன்றென்று தெரியுமா ?
எதுவும் செய்ய,
முடியாத,
கடவுளை,
எல்லாம் செய்யுமென்று,
நம்பி,
முடியவில்லை என்றாலும்,
முயற்சி செய்யும்,
அவர்களை,
இழிவுபடுத்தும் கூட்டமே,
நீ அழிந்து போ மொத்தமே,
தூணாய் நாம்,
இருந்தாலே,
அவர்கள் அதில்,
கோபுரமே கட்டுவார்கள்,
நாம்,
துரும்பாக கூட,
இருப்பதில்லை,
அவர்களை வசைபாட,
படைக்கப்பட்ட,
பழமொழி எத்தனை?
அவர்கள் புகழ் பாட,
வந்ததா நமக்கு,
சிந்தனை,
கை இல்லாதவனிடம்,
ஓவியம் வரைய,
கால் போதும் என,
சொல்லி பார்,
அவன் விமானத்தையே,
ஓட்ட முயற்சிப்பான்,
உன்னால் முடியாது,
என சொல்ல,
ஒரு கூட்டமே உண்டு,
முடியும் என,
சொல்லும் கூட்டமும்,
சற்று,
தொடர்பு இன்றி,
தள்ளியே இருக்கிறது,
அடித்து அடித்து,
அவர்களை,
தாங்கி கொள்ள,
பழக்கி விட்டோம்,
எதிர்த்து நின்று,
போராட,
அவர்களுக்கு கற்று,
தர நாம்,
மறந்து விட்டோம்,
இனி ஒரு,
சினிமாவிலோ,
கண் எதிரே,
யார் ஒருவரையோ,
அவமானம்,
செய்யும் போது,
கை கட்டி,
வேடிக்கை பார்த்தால்,
ஊனம் அவர்களுக்கு அல்ல,
நமக்கு தான்,
கல்யாண சந்தையிலே,
கடைசியாய் நிற்கும்,
அவர்கள் தான்,
கண்ணியமான கணவன்மார்கள்,
அவர்கள் யாரையும்,
மனத்தால்,
புண் படுத்துவது இல்லை,
வலியின் வேதனை ,
அறிந்தவர்கள்,
கடன் பட்டு,
இருக்கிறோம்,
அவர்களிடம் நாம்,
எல்லா ஆயுதங்களுடன்,
போட்டி போடும்,
உங்களிடம்,
ஆயுதம் இன்றி,
வெற்றி பெறும்,
அவர்களுக்கு,
நாம் கடன் பட்டு,
இருக்கிறோம்,
இருட்டிலும் நமக்கு,
கண் தெரியாமல் போகும்,
வயதானால்,
நடையும் நின்று போகும்,
பேசும் வாயும் அடைந்து போகும்,
நம் வாழ்விலும்,
ஊனம் உண்டு என்பதை,
உணர்ந்து கொள்,
இறைவனை பழிப்பது,
பாவம் என்றால்,
ஆயிரம் முறை,
பழிக்கலாம்,
இப்படி அவர்களை,
படைத்த பாவத்திற்கு,
போலியோ என்ற நோய்க்கு,
காரணம்,
பெற்றோர்களா,
பிள்ளைகளா,
நாம் செய்த தப்புக்கு,
அவர்களை.
பழி சொல்வது அவமானம் !
வலியுடன்,
கார்த்திக்.