உன்னைப் புரிந்து கொள்

உன்னைப் புரிந்து கொள்
உலகமே உனக்குப் புரியும்.
உன்னை உனக்கே
தெரியவில்லை எனில்
யாரைநீ புரிந்து கொள்வாய்?
யார் உன்னைப் புரிந்து கொள்வார்?
கோபுரம் தரைக்கு வரலாமா?
நேற்றைய தவறுகள்
இன்றைய பாடங்கள்.
நேற்றும் இன்றும் ஒன்றல்ல;
நாளையும் இருக்கும் அப்படியே.
மாற்றங்கள் காலத்தின் கட்டாயம்
மாறாமல் இருந்தால் எது வளர்ச்சி?
தேங்கியுள்ள நீரே விஷமாகும்
ஊறும் நீரும் ஓடும் நீருமே
உயிர்காக்க உதவும்.
ஒரே சிந்தனை உயர்ந்த
சிந்தனை எனில்
வானத்தின் உச்சிக்கே
நமைக்கொண்டு செல்லும்!
ஒரே சிந்தனை வெறுப்பைக்
கோபத்தை, ஆத்திரத்தைத்
தரும் எனில்
மற்றவர்க்கும் கேடு
நம்மையும் அது அழித்துவிடும்.
உயரும் எண்ணம் உனக்கிருந்தால்
நல்லதையே நினை.
நம்மை நாமே அழித்துக் கொள்ளவா
நாம் இங்கு வாழ்கிறோம்? (1999)
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

பதிலாக வேண்டும்...
மெய்யன் நடராஜ்
02-Apr-2025

முட்களின் பரிவு...
தாமோதரன்ஸ்ரீ
02-Apr-2025
