பாவேந்தன் பாரதிதாசன்

பாரதியாரைப் பாட்டில் புகழ்ந்த
பாரதிதாசன் இன்றில்லை எனினும்
வாரணம் ஆயிரம் சூழ அவனது
தோரணப் பாக்கள் உலாவருகுது பாரீர் !
சாதியை எரிக்கத் தானே எரிந்து
சொதியானான் பாரதிதாசன் !
பாதிப்பில்லா உலகம் காண
சாதி மாறி காதல் செய்கவென்றான் !
கண்ணில் நெருப்பு சுடர்விடும் கவிஞனுக்கு
கண்ணாடி போட்ட தாசன் இவன் !
பண்ணால் பரப்பினான் சமத்துவத்தை
தன்னால் மாறியது சமுதாயம் !
புதுச்சேரி வாசன்
புதுமைப் புலவன்
மதுவாய்த் திகழும் இவன் நூற்கள் !
கனிவாய் மொழிவான்
பணிவாய் நடப்பான்
துணிவாய் சமத்துவம் சொல்லும் இவன் பாக்கள் !