நினைவே இன்பம் பாடல்

நினைவே இன்பம்..... (பாடல்)

ஆண்
=====

இதய பரிமாற்றத்தில்
எத்தனை எத்தனை மாற்றங்கள்
எத்தனை தடுமாற்றங்கள்
எத்தனை தடுமாற்றங்கள்???

இரவினில் இமைகள்
சேர மறுக்குது - மனம்
பகலினில் கனவு
கண்டு மகிழுது...

எதிரில் தோன்றும்
யாவும்... யாவுமே...
உன் தோற்றமாகியே
கண்கள் காணுது....

உன்னைக் கண்ட
நாள் முதல்... முதல்...
என்னுள் தோன்றிய
மாற்றம் ஆயிரம்...

உன்னைக் காணாது
உறக்கம் கொள்வதில்லை
எவர் சொல்லும்
செவிகள் ஏற்பதில்லை
உந்தன் குரலே காதில் ஒலிக்குது
- அதை
இனிய கீதமென செவிகள் ரசிக்குது

இன்பம்... இன்பம்... இதுதான்...
உன்னை எண்ண எண்ண சுகம்தான்...

======================(இதயப் பரிமாற்றத்தில்)

பெண்
======

உன்னைக் காணாத
பொழுதுகள் நீளும்
கண்ட பொழுதினில்
கரைந்தே போகும்....

உந்தன் நினைவே
முழுதும்... முழுதுமாய்...
மற்றவை எல்லாம்
மறதி.... மறதியாய்...

நிலைக் கண்ணாடி முன்
நானும் நிற்கையில்
எந்தன் பிம்பம் உந்தன் உருவமாய்...
எந்தன் பிம்பம் மறைந்தது மாயமாய்...
நானும் நீயாக மாறிப் போகிறேன்
உன் நினைவில் நானும்
உறைந்து போகிறேன்....

என்ன.. என்ன மாற்றம் - இது
என்ன மாய தோற்றம்????
இந்த மாயம் சுகம்தான்
உன் நினைவு யாவும் தேன்தான்...

=================(இதயப் பரிமாற்றத்தில்)

எழுதியவர் : சொ. சாந்தி (16-Nov-13, 10:53 am)
பார்வை : 212

மேலே