பாரத ரத்னா சச்சின்
கோடானகோடி இதயங்களின்
துடிப்பை கேட்டதுண்டா ?
சச்சினின் சதங்களை
கேட்டு பாருங்கள்
உரக்க சொல்லும்
விண் அதிரும்
கைதட்டல்களை ரசித்ததுண்டா ?
சச்சினின் சாதனைகள்
கவிபாடி சொல்லும்.
தன்னம்பிக்கைக்கு
அர்த்தம் அறியவேண்டுமா ?
சச்சினின் தடைகள்
விளக்கம் சொல்லும்
அர்ப்பணிப்புக்கு
உதாரணம் வேண்டுமா ?
சச்சினின் இளமை
உவமையாக சொல்லும்
விடாமுயற்சியை
கற்க வேண்டுமா ?
சச்சினின் பயற்சி
கற்று தரும்.
பக்குவ குணத்தை
பழக வேண்டுமா ?
சச்சினின் விமர்சனங்கள்
பதில் சொல்லும்
புகழ்ச்சி போதையில்
நிதானம் வேண்டுமா ?
சச்சினின் தன்னடக்கம்
தரம் சொல்லும்.
உலகமே உனை
உற்றுநோக்க வேண்டுமா ?
சச்சினின் ஆட்டம்
உணர்த்தி சொல்லும்.
சச்சினே.........!
நீ சொல்லி தந்த
அனுபவ பாடங்கள்
கிரிக்கெட்டிற்கு மட்டுமல்ல
தறிகெட்டு அலையும்
இளைய சமுதாயத்திற்கும்.....
சூரியன் மறைவதில்லை
பூமி சுழற்சியால்
மறைக்கப்படுகிறது.
”பாரத ரத்னா “
சச்சின் டெண்டுல்கர்
ஓய்வு பெறவில்லை
கால சுழற்சியால்
இளைப்பாறுகிறான்
அவ்வளவே.,
வாழ்க கிரிக்கெட் கடவுள் !
----------------------------------------------------------------------------
-சச்சினின் அதிதீவிர ரசிகன்
இரா.சந்தோஷ் குமார்

