யாரை நோவது...

யார் வாழ்ந்தால் என்ன?
யார் இறந்தால் என்ன?
மனதை கோயிலாக்கு-அதில்
இறைவனை நிரந்தர நண்பனாக்கு!

அழகு நிறைந்த உலகம்
ஆண்டவனின் கை வண்ணம்
ஆராதித்தால் வரும் இன்பம்
அனுபவித்தால் பெரும் துன்பம்!

மனிதனை மனிதன் துதிக்கிறான்
பதவியும் பொருளும் குவிக்கிறான்
மங்கை நிலவை அணைக்கிறான்
மரணம் என்றால் துடிக்கிறான்!

பொருள் இருந்தால் மதிக்கிறான்
அருள் இருந்தால் துதிக்கிறான்
இருள் மனதில் நடிக்கிறான்
இறைவனை துணைக்கு அழைக்கிறான்!

பக்தியிங்கு பகல் வேடம்
பண்புக்கு வந்ததிங்கு தோஷம்
பணமிருந்தால் வரும் சந்தோஷம்
குணத்திற்குப் பிடித்தது ஜலதோஷம்!

சராசரி மனிதனிங்கு பாவம்
சளைக்காமல் உழைப்பவருக்கு ரோகம்
பணக்காரருக்குப் போகம்-அவர்
பக்கமே அடிக்குது யோகம்!

நூறுவயது வாழ்வதில்லை சாதனை
ஆயிரமாண்டு நிலைக்கணும் போதனை
உன்னை உணர்வதே சாதனை
உலகில் மீதியெல்லாம் சோதனை!

ஆண்டவன் மனம் மாறணும்
கண்திறந்து ஏழைகளை பார்க்கணும்
பணக்காரருக்கு அருளைக் கொடுக்கணும்
ஏழைகளுக்கு பொருளை கொடுக்கணும்!

இறைவனிடம் வாழ்க்கையை விடுத்து
நம்பிக்கையை மனதில் நிறுத்து
நம்பியவருக்கு கை கொடுத்து
நாணயமாய் வாழ்க்கையை நடத்து!

எழுதியவர் : விஷ்ணுதாசன் (21-May-10, 1:38 pm)
சேர்த்தது : விஷ்ணுதாசன்
பார்வை : 1012

மேலே