+சச்சின் சச்சின் சச்சின்+
அச்சிலேறிய எழுத்துக்கள் அனைத்தும்
சச்சினைப்பற்றியே செய்திகள் உரைத்தன!
பச்சிளம்குழந்தைக்கும் சச்சினைத் தெரியும்!
கட்சித்தலைமையும் சச்சினை அறியும்!
வாய்ப்பேச்சில் வல்லவன் இல்லை!
விளாசும்பந்துக்கள் விலாசம் தேடும்!
விசாலமான எண்ணம் உண்டு!
விசுவாசமான ரசிகர்கள் உண்டு!
பார்க்கும் பார்வைக்கு குழந்தைமாதிரி!
செய்த சாதனைகள் கடவுள்மாதிரி!
வாழ்த்தும் உள்ளங்கள் உறவுமாதிரி!
வாழ்வாய் நெஞ்சத்தில் நட்புமாதிரி!
பட்டங்களுக்கு உன்னாலே பெருமை!
மைதானத்தில் இனிநீயின்று வெறுமை!
பார்போற்றும் மும்பை புதல்வன்
பாரதத்தின் பாரத் ரத்னா!