உன்னில் இருக்கு கோடிகள்

ஒரு மகா முனிவர் பல மாதங்களாக ஒரு மரத்திற்குக் கீழே தவம் செய்து கொண்டு இருந்தார். அவரிடம் ஒருவர் தான் வாழ்வதற்கு ஒரு வழி சொல்லுங்களேன் என்றான்.
அந்த முனிவர் அவனிடம்,''மனிதா நான் உனக்கு என்ன செய்யவேண்டும் ?என்றார்.
அதற்கு அவன்,''பல தொழில்கள் செய்து வந்தேன்..இருந்தாலும் என்னால் முன்னேற முடியவில்லை'' என்றான்..
பிறகு ,''எனக்கு ஒரு தொழில் செய்வதற்கு முதலீடு வேண்டும்'' என்றான்...
எவ்வளவு வேண்டும்? என்றார் முனிவர்..
அதற்கு அவன்,''ஒரு லட்சம் இருந்தால் எனது குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்வேன்''என்றான்.
மாமுனிவர்,''ரூபாய் ஒன்றும் பெரிதல்ல...உன் வலது கையைக் கொடு ?ஒரு லட்சம் தருகிறேன்''என்றார் ..
அதற்கு அவன்,''வலது கையைக் கொடுத்துவிட்டு நான் என்ன செய்வது?வேறு ஏதாவது கேளுங்கள் ''என்றான்...
அதற்கு முனிவர்,''சரி உன் இரண்டு கண்களையாவது கொடு இரண்டு கோடி தருகிறேன் ''என்றார்..
அதற்கு அவன்,''''ஐயா சாமி எனக்கு ஒன்றுமே வேண்டாம்'' என்று ஓடினான்..
முனிவர்,''மனிதா கொஞ்சம் நில்..நான் சொல்வதைக் கேள்..என்றார்..
உடனே அவன்.''நின்றான் ''
அந்த முனிவர்,''உன் கைகள் இரண்டும் இரண்டு லட்சம் ..உன் கண்கள் இரண்டும் இரண்டு கோடி..உன்கிட்டே இருப்பது பல கோடிகள்..முதலில் நீ உன்னை நம்பு..பிறகு கடவுள்,சாமி,முனிவர்களை நம்பு ..தன்னம்பிக்கையே வாழ்க்கை''என்றார்..
பிறகு அவன்,,,முனிவரின் கூற்றுப் படி நம்பிக்கை விழித்து மகிழ்ச்சியோடு சென்றான் ..

நன்றி
திரு.s சித்தையா

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (17-Nov-13, 6:54 am)
பார்வை : 115

மேலே