என்னையும் அறியாமல்

வியந்தேன் உன் ஆட்டம் கண்டு,
ஆர்ப்பரித்தேன்! உன் சாதனைகளை எண்ணி,
மெய் மறந்தேன்! வாய் திறந்தேன்!
சச்சின்! சச்சின்!! சச்சின்!!!
உன் விளையாட்டின் வயதோ,
இருபத்து நான்கு!
பெற்ற புகழை உன்,
உள்ளங்கையில் தாங்கு!
ஆர்ப்பரித்தேன்! ஆனந்தம் கொண்டேன்!
சச்சின்! சச்சின்!! சச்சின்!!!
இந்திய வீரர்களுக்கு எடுத்துக்காட்டாய்,
பாரத நாட்டிற்கு பெருமை சேர்த்த
உனக்கு பாரத ரத்னா மிகையாகாது!
மெய் மறந்தேன்! வாய் திறந்தேன்!
என்னையும் அறியாமல்...,
சச்சின்! சச்சின்!! சச்சின்!!!