சின்னப்பொண்ணு

சில்லென காற்று
சிநிங்கிடும் நாற்று
சின்னப்பொன்னு வந்தாலே
சிங்காரமா வரப்பிலே.

சின்ன சின்ன சைகையிலே
சினுங்களில்லா இமைகளிலே
சின்ன மாமா எங்கிருக்கே
சிட்டா பறக்குறாலே.

சிந்துகிற சிரிப்பையெல்லாம்
சிற்பியிலே சேத்துவச்சி
சின்னமாமா வந்ததுமே
சிதராம சேர்க்கப்போறேன்.

சிங்காரம் பண்ணிக்கிட்டு
சில்லுப்பொட்டு வச்சிகிட்டு
சின்னமாமா உன்ன தேடி
சில்லுவண்டா சுத்துரேனே.

சிட்டா பரந்த பாதம்
சிக்கிக்காமலே நின்னதென்ன
சின்னமாமா உன் தோளுல
சிரிக்கி எவளோ சாயக்கண்டு...

சின்னதா நீ முகம் சுளிச்சாலு
சிவந்துடுமே என் கன்னம், இப்போ
சின்னத்தனம் பண்ணிபுட்ட
சித்தமெல்லாம் செதரிப்போச்சே.

சின்னப்பொண்ணு வேணாம்முன்னு
சின்னதா நீ சொல்லிருந்தா
சிவனேன்னு போயிருப்பே
சிட்டு இவள கட்டிக்கல, அதுக்குள்ள
சின்னவீடு வச்சிககிட்டயே!

சின்ன குயில் கத்துரேனே
சின்ன இதயம் நின்னுப்போச்சே
சின்னப்பொண்ணு உன்ன விட்டு
சிக்காம போய்டுறேன்.

எழுதியவர் : ரா. ராஜ் நாராயணன் (17-Nov-13, 9:21 pm)
Tanglish : sinnapponnu
பார்வை : 114

சிறந்த கவிதைகள்

மேலே