மழைத்துளி என் காதலன்
மழைத்துளி என் காதலன்
மழைத்துளி என் காதலன்
பல துளி,அலாதி அவன் ஒலி
உடையேதுமில்லாமல் வீழ்ந்துரைந்திடுவான்
என் மேனியிலே
ஊரந்திடுவான் ஒரு துளியாய்
உடல் நுனிவரையே
ஒன்று கூடிடுவான் வெள்ளமாகிடுவான்
மேனியிலே வளைந்தோடிடுவான்
உரசி,ஓடி சரசம் புரிவான்
என்னுள் கலந்தே என்றுமிருப்பான்
மேலாடை அத்தனையும் அகற்றிடுவான்
கடல் சேரத்திடுவான்
குளிரந்திடுவேன்,தலை குனிந்திடுவேன்
அவன் வந்து சென்றால்
நான் பூத்து நிற்பேன்
எங்கள் ஊடலிலே ஓரறிவுயிர் தாவரங்கள்
ஆயிரமாயிரங்கள்
அவன் அற்புதங்கள்
மழைத்துளி என் காதலன்.
-வளர்புரம் யுவராசன்.
முகவரி.
2,கிருஷ்ணன் தெரு,139,காமராசர் சாலை,
ஐசுவர்யம் பிளாட் நம்பர்-A1
கொடுங்கையூர்,சென்னை.
கைபேசியில் : 9444030610.