சிவசக்தி
ஆணாகவும் ஆனோம்
பெண்ணாகவும் ஆனோம்
அறிவில்லாத மக்களுக்கு
அருவருப்பாணோம்
வீனாகிபோனோம்
விபச்சாரி பட்டம் பெற்று
விதியின் மேல் பலி போட்டு
விக்கிதான் போனோம்
பெற்றோரும் துணையில்லை
உற்றாரும் துணையில்லை
தெய்வத்தை நம்பிவந்தோம்
தெய்வமும் துணைவரலை
அன்புகாட்ட ஆளில்லை
அரவணைக்க கரங்கலில்லை
அரவாணி என்ற எங்கள்
பெயருக்கு மட்டும் இங்கே
குறையுமில்லை
பார்வதியும் நாமே
பரமசிவனும் நாமே
நம்பிக்கை துணையிருக்க
கலங்குவதும் வீணே!..........