இயற்கையின் சிறப்பு

விழியை வீழ்த்திடும் நீர்வீழ்ச்சி
விழுந்திடும் நீரும் குளமாச்சு !
அள்ளிப் பருகிட ஆசையேதான்
அருவி நீரிலும் குளிக்கவும்தான் !
இயற்கை எழிலின் உருவமாச்சு
இன்பம் பொங்கும் உள்ளமாச்சு !
அருகே சென்றால் ஆனந்தமே
அமைதி கிட்டிடும் நிச்சயமே !
பசுமை சூழலின் பளபளப்பே
பார்க்கும் மனிதரை மயக்கிடும் !
அழிக்காமல் விடுங்கள் இதனை
அருமை தெரியாத உள்ளங்களே !
பழனி குமார்