சதுரங்கம்-1
அதி காலை நேரம் ,
பேருந்து நிலையம், இலேசான மழை நேரம்
கையில் சற்று கனமான சூட்கேஸ் உடன் வந்து இறங்கினால் உஷா, சுற்றும் முற்றும் பார்த்தாள்,, எல்லாமே புது முகங்கள்,,,,, தன் தோல் பையிலிருந்து விலாசம் ஒன்று எடுத்தாள்,,
அது மழையில் நனையாமல் பத்திரமாக பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள ஆட்டோ ஸ்டாண்டிற்கு சென்றாள், ஏழு, எட்டு ஆட்டோக்கள் நின்றன, ஆனால் ஆள் யாரும் இல்லை . கடைசி ஆட்டோவில் மட்டும் ஒரு வயதானவர் இருந்தார்
"என்ன மா ஆட்டோ வேணுமா??"
"ஆமா "
"எங்க போகணும்??"
விலாசத்தை நீட்டினாள்,,,
"அட படிச்சு சொல்லுமா படிக்க தெரிஞ்ச நான் ஏன் ஆட்டோ ஓட்ட வரேன்"- என்றார்
"நம்பர் 10, சாரங்கன் வீதி"
"அட அந்த எடமா அது ரொம்ப தூரம்மா தவிர ஆள் நடமாட்டம் வேற அவ்வளவா இருக்காது. அங்க போன திரும்பி நான் தனியாதான் வரணும்."
"நான் கொஞ்சம் அவசரமா போணும் மழைவேற கொஞ்சம் உதவி பண்ணுங்க"- என்றாள் உஷா
"சரி 150 ரூபா குடுங்க"
"அவ்வலோவா 100 ரூபா வங்கிகொங்க"
"என்ன மா முதல் சவாரி பேரம் பேசாம ஏறுங்கமா"- என்று ஆட்டோவை ஸ்டார்ட் செய்தார் ஆட்டோகாரர்
வேறு வழி இல்லாததால் உஷாவும் ஏறினாள், சிறிது துரம் சென்றதும் கட்டிடங்கள் எல்லாம் மறைந்து போயின,,, சவுக்கு தோப்பு ... காடு மாதிரி வளர்ந்திருந்தது
"என்ன இந்த ஏரியா இப்டி இருக்கு???"- கேட்டாள் உஷா
"அதன் சொன்னேனமா இது புதுசா டெவொலப் ஆகுற ஏரியா இங்க இருக்குற பணக்காரங்க அரசாங்கத்தோட உதவி இல்லாம கரண்ட், தண்ணி வசதி எல்லாம் அவங்களாவே செஞ்சிகிட்டாங்க"
உஷா மனதிற்குள் நினைத்தால்,"இப்டி ஒரு இடத்துலையா அபி இருக்கா??"
அபி உஷாவின் தோழி, கொஞ்சம் வசதி படைத்தவள்,,, அவளை தேடி தான் உஷா வந்திருக்கிறாள்
காரணம், உஷாவின் மூத்த சகோதரிக்கு திருமணம், அபி கல்லூரி காலங்களிலே உஷாவிற்கு அதிகம் பண உதவி செய்திருக்கிறாள்.
எனவே அவளிடம் தன் தமக்கையின் திருமணத்திற்கு உதவி நாடியே வந்து கொண்டிருக்கிறாள்,
அபியின் வீடு வந்தது, "அம்மா நீங்க சொன்ன வீடு இது தான் மா"- என்றார் ஆட்டோகாரர்,
"இந்தாங்க"- 150 ரூபாயை நீட்டினாள் உஷா
"பாத்தீங்கலாமா இனி 50 km நான் மட்டும் தனியா ஆட்டோவை ஓட்டிகிட்டு போகணும்"- என்று சொல்லிவிட்டு ஆட்டோ வை கிளப்பினார் அது புகை மண்டலத்தை உருவாக்கி கிளம்பியது,
அந்த ஆட்டோ சென்றதுடன் அந்த இடத்தில் ஒரு மயான அமைதி
தன் உடமைகளுடன் உள்ளே சென்றாள் உஷா
வாசலில் கேட் தாண்டி, எட்டி பார்த்தாள் நாய் இருப்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.
உள்ளே சென்றாள் வாசலில் புதர் மண்டிக்கிடந்தது , ஒரு காலத்தில் அது புல்வெளி பிரதேசமாக இருந்திருக்க வேண்டும், சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்தது
வாசல் கதவு இறுக்க தாழிடப்பட்டிருந்தது,,, கால்லிங் பெல் தேடி அழுத்தினாள்,,, அது உள்ளே வீரிட்டு அடங்கியது,,,,
5 நிமிடத்திற்கு பின்,,,,,,,,
கதவு திறக்கப்பட்டது,,, ஒரு ஆண் நின்று கொண்டிருந்தார்,
"நீங்க யார்?""- என்றார் அவர்
இந்த கேள்வி உஷா கேட்க நினைத்தாள், அவர் முந்திக்கொண்டார்
"என் பேரு உஷா இங்க அபிநயானு,,,,,,,,,,,,,,"
"ஆமா என் மனைவிதான்"
"என்ன அபிக்கு கல்யாணம் ஆயிடுச்சா"- அதிர்ந்தாள் உஷா
"எனக்கு அபி சொல்லவே இல்லையே"
"நீங்க அபிக்கு உறவா??"- என்றார் அவர்
"நான் அபியோட தோழி"
"எங்களது காதல் திருமணம் பெற்றோர் எதிர்ப்பால யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிகிட்டோம் அதன் சொல்ல முடில,,,,,,,,,, -உள்ள வாங்க" - என்றார்
உஷாவிற்கு பிரமிப்பாக இருந்தது,, நம்மிடம் எதையும் மறைப்பவள் இல்லை அபி அப்படி இருக்க தனக்கு திருமணம் ஆனதை எப்படி மறைத்தாள்,
உள்ளே சென்றாள் உஷா ஹாலில் ஒரு புகைப்படம் அதில் அபியும் அந்த மனிதரும் கனமான ரோஜா மாலையுடன் வாய் நிறைய புன்னகையுடன் இருந்தார்கள்
உஷா அந்த புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்
அந்த மனிதர் வந்தார் கையில் கோப்பையுடன், "இந்தாங்க காபி"
"தேங்க்ஸ் உங்க பெயர் என்ன?"
"என் பெயர் மோகன்"
"அபி என்கிட்டே எதையும் சொல்லாம இருக்க மாட்டா அப்டி இருக்க இவ்ளோ பெரிய விஷயத்தை எப்டி சொல்லாம விட்டா.,,,,,,,,,,"
மோகன் சிரித்தான்,"அதன் சொன்னேனே எங்களோட திருட்டு கல்யாணம்னு"
"ஆமா அபி இப்போ வீட்டுல இல்லையா"
"அபி ஒரு முக்கியமான விஷயமா வெளியூர் போயிருக்கா வர 2 நாள் ஆகும் "
"ஐயோ நான் அவசரமா அபிய பாக்கணுமே"
"அப்ப இருந்து பாத்துட்டு போங்க"
உஷாவிற்கும் வேறு வழி இல்லை ஒப்புக்கொண்டாள்,,,
"நீங்க காபி சாப்டுங்க இதோ வரேன்"- என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான் மோகன்
உஷா அமைதியாக காபி-ஐ உறிஞ்சினாள், அப்படியே வீட்டை பார்த்தாள்.. வீடு அவ்வளவு சுத்தமாக இல்லை கண்ணாடி மேல் தூசி படலம்
சுவரில் சிலந்திகளின் நூலாம் படைகள்,,,,,,,,,,,,,,,,,
"என்ன இவள் வீட்டை இப்டி வச்சிருக்கா,,, ஒரு வேலைக்காரி வச்சியாவது சுத்தம் செய்ய வேண்டாம்" - முனங்கிய படி இருந்த உஷா விற்கு அந்த சத்தம் கேட்டது
"வரட்,,,,,,,,, வரட்,,,,,,,,,, வரட்"
"என்ன சட்டம் அது உற்று கேட்டாள் யாரோ எதையோ பெருக்கும் சப்தம்..,,,,,,, கூடவே இப்போது தண்ணீர் கொட்டும் சப்தமும் இணைந்து கொண்டது
இந்த நேரத்தில் யார் பெருக்குவது,,,,,,, அந்த சப்தம் உள்ளே இருந்துதான் வந்தது,,, மோகன் சென்றானே அங்கிருந்து,,,,,,,,,
மெல்ல உள்ளே சென்று பார்த்தாள் உஷா,,,,,, மோகன் தான் கையில் துடைப்பத்துடன் வாளியில் தண்ணீருடனும் நின்று தரையை சுத்தம் செய்துக் கொண்டிருந்தான்
எதை சுத்தம் செய்கிறான் நன்றாக பார்த்தாள்
அந்த தரை முழுவதும் திட்டு திட்டாக இரத்தம்,,,,,,,,,,,
(விளையாடுவோம்,,,,,,,,,,,,,,,)