அறை

சுதன் குளியலறையிலிருந்து வெளிப்பட்டான்.அவன் கண்களில் தூக்கமின்மையும் முகத்தில் கோபமும் அப்பட்டமாக தெரிந்தன."பைத்தியகாரி,எதிலும் பார் அவசரம்.மனிசனை புரிஞ்சு கொள்றாளா?"என்று அவன் வாய் யாரையோ திட்டிக்கொண்டிருந்தது.சுதன் ஒரு பாவப்பட்ட சொப்ட்வெயர் எஞ்சினியர்.கம்பெனி கொடுக்கும் எண்பதாயிரம் ரூபா சம்பளத்திற்காக எருமை மாடாய் உழைத்துக் கொண்டிருந்தான்.நேற்றும் அப்படித்தான்.தனக்கு அளிக்கப்பட்ட புரொஜெக்ட் வேலைகளுடன் போராடி விட்டு தூங்கப் போகும் போது மணி மூன்றாகி விட்டது.இது தெரியாத அவன் மனைவி தர்ஷினி வழக்கம் போல ஆறு மணிக்கு அவனை எழுப்பினாள்.அரைகுறைத் தூக்கத்தில் சுதன் திடுமென்று எழும்ப தர்ஷினியின் கைகளில் அவன் தோள்கள் பட்டு சூடான தேநீர் அவன் முகத்தில் சிந்தியது.தூக்கமின்மை,தேநீரின் சூடு தந்த எரிச்சல்,புரொஜெக்ட் டென்ஷன் எல்லாம் ஒன்றுசேர ஆத்திரத்தில் தர்ஷினியை கன்னத்தில் அறைந்துவிட்டு முகத்தை கழுவ பாத்ரூமுக்குள் ஒடினான் சுதன்.இது தான் இன்று காலை நிகழ்ந்த சம்பவம்.இப்போது புரிந்திருக்கும் அவன் திட்டிக்கொண்டிருப்பது யாரை என்று.


குளியலறைக்குச் சென்றவன் அப்படியே காலைக்கடன்களை முடித்துக் கொண்டு திரும்பியவனுக்கு அப்போது தான் தர்ஷினியை அறைந்து விட்டேன் என்பது ஞாபகத்திற்கு வந்தது.என்ன செய்கிறாளோ தெரியவில்லை என்று எண்ணியவன் வீடு முழுவதும் தேடினான்.காணவில்லை.வாசலில் அவளது ஸ்கூட்டியையும் காணவில்லை.கம்பஸ் போயிருப்பாளோ என்று நினைத்துக்கொண்டு தனது அறைக்குத் திரும்பியவன் அதிர்ந்தான்.அவனது மேசையில் சுடச்சுட தேநீர் தயாராக இருந்தது.தேநீர்க்கோப்பையின் கீழ் ஒரு கடதாசிக் குறிப்பு"இண்டைக்கு கம்பஸ்ல assignment submit பண்ண வேண்டும்.இன்னும்் complete பண்ணல.அது தான் அவசரப்பட்டிட்டன்.sorry".சுதனுக்கு யாரோ சம்மட்டியால் அடித்தது போலிருந்தது."சே,என்ன மனிசன் நான்.இவளுக்குப் போய் கை நீட்டிட்டனே" சற்று முன் அவளை திட்டிய வார்த்தைகள் ஞாபகம் வந்தன."பைத்தியக்காரி,எதிலும் பார் அவசரம்.மனிசனை புரிஞ்சு கொள்றாளா?".அவை தன்னைப் பரிகசிப்பதாய் தோன்றியது.குற்ற உணர்வு அவனை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.இன்று 5 மணிக்குள் புரொஜெக்ட்டை முடித்து upload செய்யவேண்டும்.எதையும் செய்ய முடியாமல் தவித்தான் அவன்.மொபைலை எடுத்து மனம் sorry என்று தர்ஷினிக்கு sms செய்தான்.its ok,நான் அதை அப்பவே மறந்திட்டன்"என்று தர்ஷினி reply செய்தாலும் அவனுக்கு திருப்தி ஏற்படவில்லை.மனம் ஆறும் வரை sorry sorry என்று sms அனுப்பிவிட்டு புரொஜெக்ட் வேலையை கவனிக்கத் தொடங்கினான்.

தர்ஷினி வந்தவுடன் அவளை எங்காவது கூட்டிக்கொண்டு போகவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டதாலோ என்னவோ அவனது மூளையும் கைகளும் வழக்கத்தை விட விரைவாகச் செயற்பட்டன.மூன்று மணிக்கே எல்லாவற்றையும் முடித்து தரவேற்றம் செய்துவிட்டு அவளது வருகைக்காய் காத்திருந்தான்.நான்கு மணிக்கு தர்ஷினி வீடு திரும்பினாள்.வந்தவுடன் அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க தர்ஷினி "என்ன மீண்டும் sorryஆ,ஏற்கனவே 12 sms அனுப்பியாச்சு" என்றாள்.இல்லையே என்று நக்கலாக சிரித்த அவன் தொடர்ந்தான் "quickஆ ரெடியாகுங்க அம்மணி,எங்கேயாவது வெளியே போவம்,ரெடியாகிறதுக்கு இரண்டு மணி நேரம் எடுத்து பழிவாங்கிடாத தாயி" "இந்த நக்கலுக்கு மட்டும் குறைச்சலில்லை"என்று பொய்யாக முகத்தை ஒருபக்கமாக திருப்பிக் கொண்டு சென்றாள் தர்ஷினி.அடுத்த அரைமணி நேரத்தில் இருவரும் புறப்பட்டு NO LIMIT இல் தர்ஷினிக்கு ஒரு சுடிதாரும் சுதன் தனக்கு ஒரு ரீசேர்டும் எடுத்துக் கொண்டு அப்படியே Savoy 3D இல் WOLVERINE உம் பார்த்துவிட்டு கொள்ளுப்பிட்டி மக்டொனால்ட்ஸில் இரவுணவையும் முடித்துவிட்டு காரில் திரும்பும் போது தர்ஷினி சொன்னாள்"உடுப்பு,படம்,சமைக்கிற வேலை மிச்சம்.இப்பிடி எண்டா வாரந்தம் ஒருக்கா அறை வாங்கலாம் போல இருக்கே"."அடிங்க்"என்று சுதன் சொல்ல "அப்ப அடுத்தது Fashion bug இற்கா போறோம்"என்று கண்ணடித்தாள் தர்ஷினி.அவள் தலை மேல் தலை சாய்த்தவாறு சத்தமிட்டு சிரித்தான் சுதன்.

எழுதியவர் : (17-Nov-13, 10:46 pm)
பார்வை : 475

மேலே