டினேஷ்சாந்த் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : டினேஷ்சாந்த் |
இடம் | : யாழ்ப்பாணம்,இலங்கை |
பிறந்த தேதி | : 23-Jan-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 150 |
புள்ளி | : 12 |
விதி தந்த பாதையில் வாய் மூடிப் பயணிக்கும்கோடிக்கணக்கானோரில் இவனும் ஒருவன்
வலைப்பூ-imsdsanth .blogspot.com
மழலையின் புன்னகையில் மதமில்லையே
வழிகின்ற கண்ணீரில் இனமில்லையே
வீணாண பிளவுகள் நமக்குள் ஏனோ- இன்னும்
வீணர்களாய் வாழ்வது எத்தனை நாளோ
சமத்துவத்தின் மகத்துவங்கள் புரிந்துவிடின்
சண்டைகள் சச்சரவுகள் ஏதுமில்லையே
சமாதான ஒளி எங்கும் பரவிடின்
சகோதரராய் அனைவரும் வாழ்ந்திடலாமே
சுதன் குளியலறையிலிருந்து வெளிப்பட்டான்.அவன் கண்களில் தூக்கமின்மையும் முகத்தில் கோபமும் அப்பட்டமாக தெரிந்தன."பைத்தியகாரி,எதிலும் பார் அவசரம்.மனிசனை புரிஞ்சு கொள்றாளா?"என்று அவன் வாய் யாரையோ திட்டிக்கொண்டிருந்தது.சுதன் ஒரு பாவப்பட்ட சொப்ட்வெயர் எஞ்சினியர்.கம்பெனி கொடுக்கும் எண்பதாயிரம் ரூபா சம்பளத்திற்காக எருமை மாடாய் உழைத்துக் கொண்டிருந்தான்.நேற்றும் அப்படித்தான்.தனக்கு அளிக்கப்பட்ட புரொஜெக்ட் வேலைகளுடன் போராடி விட்டு தூங்கப் போகும் போது மணி மூன்றாகி விட்டது.இது தெரியாத அவன் மனைவி தர்ஷினி வழக்கம் போல ஆறு மணிக்கு அவனை எழுப்பினாள்.அரைகுறைத் தூக்கத்தில் சுதன் திடுமென்று எழும்ப தர்ஷினியின் கைகளில்
விடை தெரியா வினாக்களாக எம் பயணம் –அதில்
வீணர்களின் கூச்சல்கள் சில நிமிடம்
விளையாட்டு பொம்மைகளாய் கருதி எங்கள்
விசும்பல்களை ரசிக்கிறது உலகம் இன்றும்
முதலைகளின் கண்ணீரை நம்பி நம்பி
முட்டாள்கள் ஆகிவிட்டோம் அன்றும் இன்றும்
வசந்தத்தின் வருகைக்காய் காத்திருந்து
வயது ஏறிப் போனது தான் மிச்சம்
மலர்ந்திடும் எமக்கொரு விடிவு என்று
மரணம் வரை காத்திருக்கும் எந்தன் நெஞ்சம்