பெண்ணிற்குள் ஆண்

ஆணும் பெண்ணும்
சரிசமம் என்றேன் நான்
ஆனால் நீயோ,
இல்லை!! இல்லை!!
ஆண் தான் ஊசத்தி
"ஜான் பிள்ளையானாலும்
அவன் ஆண் பிள்ளை"
என்று சொல்லியிருக்கிறதை
பார் என்றாய்
நானோ, ஆண் பெண்ணிற்குள்
தான் இருக்கிறான் என்பதை
ஆங்கிலத்தில் "SHE"க்குள்
தான் "HE" இருக்கிறது
என்பதையும்
"WOMAN"க்குள் தான்
"MAN" இருக்கிறது
என்பதையும் எவ்வளவு
அழகாக உணர்ந்து
சொல்லியிருக்கிறார்கள்,
இதை எப்பொழுது தான்
இந்த ஆண்கள்
புரிந்து கொள்வார்களோ என்று
எண்ணி வருந்தினேன்!!!

எழுதியவர் : சிட்னி சொக்கன் (18-Nov-13, 11:59 am)
பார்வை : 123

மேலே