நீந்தித் திரியும் காதல்
உன் மௌனமும்...என் மௌனமும்...
நீந்தித் திரிகின்றன...
நமக்கான இடைவெளிகளில்.
நம் கண்களை அணிந்து கொண்டுவிட்ட
இரவின் கனவுகள்...
உனக்குள் என்னையும்...எனக்குள் உன்னையும்...
தரிசித்துத் திரும்புகின்றன...
இதயங்களின் ஓய்வறைக்குள்.
வருடும் காமத்தில்....
சூடாகும் இரத்தத்தினைக்
குளிர்வித்துக் கொண்டிருக்கிறது
நம் காதல்.
கண்களில் தேங்கிய காதலின் வெளிச்சம்...
குழந்தைகளின் பாத மென்மையோடு...
எட்டி எட்டி உதைத்துக் கொண்டிருக்கிறது...
என் தனிமையை.