சச்சின் டெண்டுல்கர்

பதினாறு வயதில்
கிரிக்கெட் அரங்கில்
எழுந்தது ஒரு புலி
அந்நாள் முதல்
இந்நாள் வரை
பின்னால் சென்றதில்லை அது
மனிதர்கள் அனைவரும் துன்பத்தை தேடிகொள்கின்றனர்
உன்போல் மனிதர்கள் சிலரே துன்பத்தை தேடி போய் கொள்கின்றனர்

நீ ஆடிய ஆட்டத்தில் பாதி கூட ஆடாமல்
ஆணவத்தில் ஆடுபவர் பலர்
அவருக்கெல்லாம் உன் பொறுமை கொடுக்கும் வலிக்காத சவுக்கடி
பலருக்கு நீ கற்று தந்தாய் கிரிக்கெட்
ஐந்து நிமிடமே உன்னை காண விற்று தீரும் டிக்கெட்
அர்ஜுனா பத்மவிபூஷன் பாரத ரத்னா
என்று அடுக்கி கொண்டு போகலாம் உன் சாதனையை
மனிதர்கள் உயர்வார்கள் உணர்ந்தால் நீ கூறும் போதனையை
உங்களுடன் இல்லை என்று கவலை வேண்டாம்
என் ஓய்வே உங்களுக்காகதான் என்று உன் செல்வங்களிடம் நீ கூறுகையில் கொன்றுவிட்டாய் அன்பில் வென்றுவிட்டாய்......
உன்னை போன்ற மனிதனை இனி கிரிக்கெட்டில் காண்பது அரிது .....

எழுதியவர் : தீனா (18-Nov-13, 8:32 pm)
பார்வை : 93

மேலே