தீனா கவி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தீனா கவி |
இடம் | : neyveli |
பிறந்த தேதி | : 24-Apr-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 95 |
புள்ளி | : 13 |
இருந்தது
இருக்கிறது
இருக்கும் !!!
மறைந்துள்ள மனித சக்தி
மலராமல் போய்விடும்
மனிதா !
உனக்கு தோல்வி இல்லையென்றால் "
உலகெங்கும் உன்புகழ் உலா வருமா?
நீ தோல்வி கண்டு அஞ்சி நின்றால்
லட்சியக்கனல் பற்றியவுடன்-துன்பங்கள்
லட்சங்கலானாலும் சொர்ப்பங்களாகும்!
இடைவிடா முயற்சி தடையில்லா தைரியம்
இருக்கட்டும் உனக்கு-இதுவே
சரித்திரங்களின் கணக்கு !
உன்னை விமர்சனம் செய்ய
உலகில் உருவான கூட்டம்
உனக்காக ஒரு நாள்
பல கூட்டங்களைக் கூட்டும்!
அழுது புலம்பி ஆனது என்ன ?
கண்ணீரை துடைத்தாய் -கடந்து சென்ற
காலத்தை துடைப்பாயோ?
ஆனது அனைத்தும் ஆண்டவன் பக்கம்-எதிர்வரும் காலம்
ஆளப்போகும் உன் பக்கம் !!!
prathyusha institute of technolo
வாழ்கை எனும் கோப்பையில்
கனவுகளை ஊற்றி
எதிர்காலம் எதிர்கொள்ள
நித்தம் நிகழ்காலம் மறந்து
நாளை நமதாக்க
இன்றை துளைப்பதா ?
மனிதனையன்றி எவ்வுயிரும்
நாளை உணவை இன்று யோசிப்பதல்ல!
எவ்விதையும் தண்ணீரை உறுதிசெய்து மண்ணில் புதைவதில்லை
நமக்கு
இன்று நாளைய கனவு
நாளை ?
நாளையும் உலகம் சுழலும் என்பதற்கு என்ன உத்திரவாதம் ?
மனிதா
ஏன் இந்த மராத்தான் ஓட்டம்
பணம் பணம் பணம் !
பணம் இல்லாத போதே நீ
எதிர்காலத்தில் இருக்கிறாய்
பணம் வந்து விட்டால் நிகழ்காலம் நினைப்பாயோ ?
ஒன்று மட்டும் உறுதி
கை வசம் ஆயிரம் கோடி இருப்பினும்
அதுவல்ல வாழ்கை !
அங்கில்லை மகிழ்ச்சி !
prathyusha institute of
வாழ்கை எனும் கோப்பையில்
கனவுகளை ஊற்றி
எதிர்காலம் எதிர்கொள்ள
நித்தம் நிகழ்காலம் மறந்து
நாளை நமதாக்க
இன்றை துளைப்பதா ?
மனிதனையன்றி எவ்வுயிரும்
நாளை உணவை இன்று யோசிப்பதல்ல!
எவ்விதையும் தண்ணீரை உறுதிசெய்து மண்ணில் புதைவதில்லை
நமக்கு
இன்று நாளைய கனவு
நாளை ?
நாளையும் உலகம் சுழலும் என்பதற்கு என்ன உத்திரவாதம் ?
மனிதா
ஏன் இந்த மராத்தான் ஓட்டம்
பணம் பணம் பணம் !
பணம் இல்லாத போதே நீ
எதிர்காலத்தில் இருக்கிறாய்
பணம் வந்து விட்டால் நிகழ்காலம் நினைப்பாயோ ?
ஒன்று மட்டும் உறுதி
கை வசம் ஆயிரம் கோடி இருப்பினும்
அதுவல்ல வாழ்கை !
அங்கில்லை மகிழ்ச்சி !
prathyusha institute of
கார்மேகம் என்ன மேகம்
உன் கூந்தலை விடக்கருமையா?
அந்த வானம் என்ன வானம்
உன் மனதை விட
எல்லையில் நீண்டதா?
மழை என்ன மழை
உன்னருகில் இருப்பதை விட இன்பம் தருவதா ?
நிலவு என்ன நிலவு
உன் பேரழகை விட பிரகாசமா ?
கடல் என்ன கடல்
உன் பற்களை விட
அழகான முத்துக்கள் கொண்டதா ?
அலை என்ன அலை
உன் சிரிப்பை விட
எது என்னை கரைக்கும் ?
காற்று என்ன காற்று
உன் மூச்சே எனக்கு புயல்!
ஒளி என்ன ஒளி
உன் நினைவை விட வேகமா ?
கவிதை என்ன கவிதை
நீ ம்ம்ம் என்று சொல்லினாலும் அதுவே கவிதை !
கடவுள் என்ன கடவுள்
உன்னை பார்க்கிற போது நான் காணும்
சொர்கத்தை விட என்ன சொர்கத்தை காட்டிவிடுவார்!!!
குப்பைத் தொட்டியில் போடத்தானா என்னை
கருதொட்டியில் வளர்த்தாய்
முறையில்லாச்சேர்க்கை என்று தெரிந்திருந்தால்
முந்திக்கொண்டு சென்றிக்கமாட்டேன் !!!
-சாலை ஓரக்குழந்தை
உன் கூந்தலில் குடியேற நினைக்கும் ரோஜாக்கள் உயிர் விடவும் தயார்