வாழ்கை வாழ்வதற்கு

வாழ்கை எனும் கோப்பையில்
கனவுகளை ஊற்றி
எதிர்காலம் எதிர்கொள்ள
நித்தம் நிகழ்காலம் மறந்து
நாளை நமதாக்க
இன்றை துளைப்பதா ?
மனிதனையன்றி எவ்வுயிரும்
நாளை உணவை இன்று யோசிப்பதல்ல!
எவ்விதையும் தண்ணீரை உறுதிசெய்து மண்ணில் புதைவதில்லை
நமக்கு
இன்று நாளைய கனவு
நாளை ?
நாளையும் உலகம் சுழலும் என்பதற்கு என்ன உத்திரவாதம் ?
மனிதா
ஏன் இந்த மராத்தான் ஓட்டம்
பணம் பணம் பணம் !
பணம் இல்லாத போதே நீ
எதிர்காலத்தில் இருக்கிறாய்
பணம் வந்து விட்டால் நிகழ்காலம் நினைப்பாயோ ?
ஒன்று மட்டும் உறுதி
கை வசம் ஆயிரம் கோடி இருப்பினும்
அதுவல்ல வாழ்கை !
அங்கில்லை மகிழ்ச்சி !


prathyusha institute of technology and management
aranvoyalkuppam ,
thirruvallur

எழுதியவர் : தீனா (23-Oct-14, 12:55 pm)
பார்வை : 108

மேலே